Updates from March, 2015 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • Shrini 10:53 pm on March 30, 2015 Permalink |  

    புது மின்னூல் – சமூக அறிஞர்களின் வாசகங்கள் 

    http://freetamilebooks.com/htmlbooks/social-scientists/Social-scientists.html

    ஏற்காடு இளங்கோ

    உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

    உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

    அட்டைப்படம் தருக.

    மின்னூலாக்குக

     
  • gnuanwar 1:13 pm on March 28, 2015 Permalink |  

    உடல் ஒருபோதும் தவறு செய்வதில்லை..! 

    மேற் கண்ட தலைப்பில் மின்நூல் உருவாக்கவும், இந்த தலைப்புக்கு அட்டை படம் தரவும்

    உடல் ஒருபோதும் தவறு செய்வதில்லை..!

     

    1. உண்மையில் நோய் என்றால் என்ன…?

    http://goo.gl/M8BPk7

     

    1. வலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன…?

    http://goo.gl/izXxP1

     

    1. விஷம் குடித்த சிறுவனின் உடலில் நடந்தது என்ன..?

    http://goo.gl/WV291K

     

    1. பேராற்றலின் துணையுடன் வீட்டில் இனிமையான சுகப்பிரசவம்..!

    http://goo.gl/tQDeHN

     

    1. குட்டி தேவதை இயற்கை முறையில் வீட்டில் சுபஜனனம்..

    http://goo.gl/ZL6WZq

     

    1. பெண்களே எச்சரிக்கை..! உங்கள் கர்ப்பப்பை கருவருக்கப் பட்டுக்கொண்டிருகிறது…!

    http://goo.gl/dU4YIF

     

    1. தடுப்பூசிகள் மூளைச் சிதைவை ஏற்படுத்தும்..! பல வருடங்களாக மறைக்கப்பட்ட பித்தலாட்டம் அம்பலம்..!

    http://goo.gl/MDBj8T

     

    1. தடுப்பூசிகள் மற்றும் சொட்டு மருந்துகளால் இறந்த மற்றும் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்..!
      http://goo.gl/rVRI7t

    ஆசிரியர்

    அக்குஹீலர்.ர.கார்த்திகேயன்

    உரிமை Creative Commons Attribution-NonCommercial-NoDerivs குறிப்பிடுதல் இலாபநோக்கமற்ற, வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND)

    மூலங்களை பெற்றதுGNUஅன்வர்

     

     

     
    • Shrini 6:24 pm on March 29, 2015 Permalink | Log in to Reply

      8 கட்டுரைகள் மிகவும் குறைவாக இருக்குமே.

      10 அல்லது 15 வந்தால் நன்று.

      A4 PDF ல் 50 பக்கத்திற்கு மேல் வருதல் நன்று.

      @gnuanwar இன்னும் சில கட்டுரைகள் கேட்டு வாங்குங்கள்.
      ஆசிரியர் அறிமுகம், மின்னஞ்சல் முகவரி தருக.

      • gnuanwar 5:44 am on April 1, 2015 Permalink | Log in to Reply

        நானும் ஆசிரியடம் இது பற்றி பேசினேன் அவர் கட்டுரகளை இன்னும் சேர்த்து அனுப்கிறேன் என்று சொன்னார் அதவரை நமக்கு கொடுத்த கட்டுரைகளை பதிபிக்க வேண்டாம் என்று சொன்னார் அவரின் புதிய கட்டுரைகள் வரும் வரை பதிபிக்க வேண்டாம்

        ஆசிரியரின் மின் அஞ்சல்

        நீங்கள் குறிப்பிட்டுள்ள வரலாறு மற்றும் தத்துவங்கள் குறித்த கட்டுரைகளை ஏற்கனவே அருண்குமார் எழுதி வருகிறார். என்னுடைய டைம்லைனிலும் அவர் என்னை டாக் செய்துள்ளார்.

        மேலும் இந்த கட்டுரைகள் முழுமையாக இல்லாமல் உள்ளதாக எனக்கு தோன்றுகிறது. இத்துடன் பல தொகுப்புகளை சேர்க்க விரும்புகிறேன். எனவே, சற்று அவகாசம் எடுத்து அனைத்து கட்டுரைகளையும் முழுமையாக தொகுத்து பின்பு முழுமை தன்மையுடன் வெளியிடலாம். அனைத்தும் முடித்து பின்பு உங்களுக்கு தகவல் கொடுக்கிறேன்.

        மேலும், நண்பரின் வீடியோ பார்த்தேன். நானே புத்தகத்தை தொகுக்கும் எடிட்டிங் வேலையை செய்ய முயற்சி செய்கிறேன், எனக்கு சந்தேகம் உள்ளபோது தங்களிடம் உதவி கேட்கிறேன். முதலில் கட்டுரைகளை எழுதி முடித்துவிட்டு தங்களை தொடர்புகொள்கிறேன். நன்றி.

        • அன்புடன். கார்த்தி.
    • இரவி 7:01 pm on March 29, 2015 Permalink | Log in to Reply

      பொதுவாக, நாம் உள்ளடக்கத்தில் தலையிடுவது இல்லை என்றாலும்

      இந்தக் கட்டுரைகள் விபரீதமாக உள்ளன.

      வீட்டில் பிரசவம் பார்க்கத் தூண்டுதல், தடுப்பூசி வேண்டாம் என்பது கட்டுரை ஆசிரியரின் தனிப்பட்ட தெரிவாக இருக்கலாம்
      ஆனால், இவற்றை மின்னூல் பரப்புவது ஆபத்தானது

      இதை வெளியிட எனது மறுப்பைத் தெரிவிக்கிறேன்.

      • gnuanwar 6:04 am on April 1, 2015 Permalink | Log in to Reply

        இந்த கருத்துள்ள புத்தகங்கள் ஏற்கனவே அச்சு நூலாக வந்துள்ளது இதபற்றி ஆசிரியரிடம் பேசி ஒரு முடிவு எடுக்கலாம்

        • இரவி 10:14 am on April 1, 2015 Permalink | Log in to Reply

          இது குறித்து நூல் ஆசிரியர் முடிவெடுக்க ஒன்றும் இல்லை. நமது குழு தான் முடிவெடுக்க வேண்டும். அச்சில் உள்ள நூல்கள் அனைத்தையும் மின்னூல் ஆக்குவது நமது நோக்கம் இல்லை. ஒரு கதை, கவிதை அது நன்றாக இருக்கிறதா இல்லையா என்பது ஆளுக்கு ஆள் இரசனை மாறும். ஆனால், இக்கட்டுரைகள் உயிரோடு விளையாடுவன. இவற்றை வெளியிடுவதிலும் பரப்புவதிலும் நமக்கு தார்மிக பொறுப்பு உண்டு.

          இந்நூலைப் படித்து தடுப்பூசி போடாமல் எந்தக் குழந்தையாவது பாதிக்கப்பட்டால் அதற்கு நமது குழு பொறுப்பெடுக்க இயலுமா?

          இந்நூலைப் படித்து யாராவது வீட்டில் பிரசவம் பார்த்து தாயும் சேயும் இறந்தால் யார் பொறுப்பு?

          வெடிகுண்டு வைப்பது எப்படி, தற்கொலை செய்வது எப்படி, வல்லுறவு கொள்வது எப்படி… இந்தத் தலைப்புகளிலும் மின்னூல் வெளியிடுவோமா?

          மாற்று மருத்துவம் என்ற பெயரில் உயிரோடு விளையாடும் மோசடிக் கும்பலுக்குத் துணை போக வேண்டாம்.

          மீண்டும் என் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன்.

    • gnuanwar 12:06 pm on April 1, 2015 Permalink | Log in to Reply

      உங்களது கருத்தை நான் மதிக்கிறேன் மேலும் ஆசிரியரின் பதிலையும் நாம் கேட்ப்போம் மேலும் என்ன மாதிரியான தரவுகளை கேட்கிறீர்கள் எனக்கு புரியவில்லை மேலும் இந்த மாற்று மருத்துவம் பற்றி தெறிந்து கொள்ள விருப்பட்டால் அதன் தரவுகளை தர காத்து இருக்கிறேன் http://acuhome.org/

      • இரவி 12:46 pm on April 1, 2015 Permalink | Log in to Reply

        தெளிவுபடுத்தலுக்குக்காக:

        என்னுடைய வேண்டுகோள் தணிக்கை முனைவோ கருத்துச் சுதந்திரந்துக்கு எதிரானதோ அன்று.

        கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் உயிர்களோடு விளையாட முடியாது.

    • இரவி 12:37 pm on April 1, 2015 Permalink | Log in to Reply

      எனக்கு தரவு வேண்டாம். FTE சார்பாக உறுதி மொழி வேண்டும். இதனைப் படித்து வாசகருக்குத் தீங்கு நேர்ந்தால் நமது குழு பொறுப்பெடுக்கத் தயாரா? என்ன வகையான பொறுப்பெடுப்பதாக அறிவிக்க முடியுமா? எனது மனைவி, குழந்தைக்குத் தவறான மருந்தோ மருத்துவமோ அளித்தால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு உண்டு.

      இந்த மாற்று மருத்துவ போதனைகளைக் கேட்டு யாராவது வீட்டில் பிரசவம் பார்த்துச் செத்தால் யார் பாதுகாப்பு தருவார்கள்?

      FTEஆல் இந்த பொறுப்பெடுக்க முடியாவிட்டால், இந்நூலைப் பதிப்பிப்பத்துப் பரப்புவது அறம் அன்று.

      இல்லை, பதிப்பிப்போம் என்று தொடர்வீர்களேயேனால், நான் இத்திட்டத்துக்குப் பங்களிப்பதை நிறுத்திக் கொள்ளத் தயங்க மாட்டேன்.

      உயிரோடு விளையாடும் திட்டங்களுக்கு என்னால் பங்களிக்க இயலாது. மன்னிக்கவும்.

    • இரவி 1:26 pm on April 3, 2015 Permalink | Log in to Reply

      கட்டுரை எண் 1 – உண்மையில் நோய் என்றால் என்ன…?

      இக்கட்டுரையில் உள்ளவற்றுக்கு என் மறுப்பு:

      //இந்த நிலை மேலும் தொடரும்போது கழிவுகளை உடலை விட்டு நீக்க வேண்டிய உறுப்புகளின் [கல்லீரல், சிறுநீரகம்] இயக்கம் குறையும் இதனையும் மருந்துகளை கொடுத்து சரிசெய்ய முயற்சிக்கும் மருத்துவம் தோற்று, அந்த உறுப்பு கெட்டு போய்விட்டது என்று கூறி அந்த உறுப்பையே வெட்டி எறிந்துவிட்டு மாற்று உறுப்பு சிகிச்சை என்னும் பெயரில் மற்றவரின் உறுப்புகளை வெட்டி வைக்கும் முயற்சியில் ஈடு படுகிறது, ஆனால் இதனையும் தன்னுடையது அல்ல என்று அடையாளம் கண்டுகொண்ட உடல் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் போது அதனையும் நிராகரிக்கும். [மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தொடர்ந்து மருந்து எடுப்பது இந்த நோய் எதிர்ப்பு சக்தியை முடக்கி வைக்கவே என்பதை இங்கு கவனிக்க வேண்டும்//

      இது உடல் உறுப்பு மாற்றத்தை எதிர்க்கிறது. மருத்துவமனைக்கே போகாத ஒருவரின் சிறுநீரகம் பாதிப்படைந்து அவருக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்திப் பிழைக்க வைக்க முடியும் என்றால் பிழைக்க வைக்கலாமா கூடாதா?

      உங்கள் உறவுக்கு இப்படி ஒரு நிலை இருந்தால் நீங்கள் முறையான மருத்துவத்தை மறுத்து விட்டு இந்த “மாற்று மருத்துவர்களிடம்” போய் என்ன மருந்தெடுத்து காப்பாற்றுவீர்கள்?

      https://www.facebook.com/photo.php?fbid=138366736293734&set=a.109234725873602.10012.100003612254243&type=1 – இந்த இணைப்பு அரசு, அரசு மருத்துவர்கள் அனைவரையும் உறுப்புகளைத் திருடும் கொலைகாரர்கள் என்கிறது. இது தொடர்பாக ஏன் பொது நல வழக்கு தொடர்ந்து தன் வாதத்தை நிறுவக்கூடாது?

      //உண்மையில் புற்றுநோய் என்றால் என்ன என்பதனை உணரவேண்டும் – மேலே கூறியபடி உடலில் தொடர்ந்து கழிவுகள் தேக்கப்படும்போது உடல் அதனை வெளியேற்ற போதுமான சக்தி இல்லாவிட்டால், அந்த கழிவுகள் உள்ளுறுப்புகளை பாதித்துவிடும் என்று அறிந்த உடல் அதனை ஒரு கட்டியாக ஒன்று திரட்டி, அதன் மேலே ஒரு பாதுகாப்பு வளையத்தையும் உருவாக்கி ஒரு பகுதியில் ஒட்ட வைக்கிறது. இந்த நிலையில் அந்த உடலுக்கு முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தால் நிச்சயம் அந்த கட்டியை கரைத்து அந்த கழிவை வெளியேற்றும் தகுதியுடன் இருக்கிறது. ஆனால் இந்த நிலையில் ஆங்கில மருத்துவம் Biopsy test என்னும் பெயரில் அந்த கான்சர் கட்டியை வெட்டி துளை இடுவது அந்த கழிவுகள் உடல் முழுமைக்கும் பரவ ஏதுவாக இருக்கும். இங்கு உடல் தவறு செய்து கட்டியை உருவாக்கியதா..? அல்லது உடலை புரியாமல் மருத்துவம் தவறு செய்கிறதா என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்..!!!//

      இந்த மாபெரும் உளறலை எழுதிய மாற்று மருத்துவர் கார்த்திகேயனின் முறையான கல்வித் தகுதி என்ன என்று அறியலாமா? ஏனெனில் முதலாம் ஆண்டு உயிரியல் படிக்கும் மாணவனால் கூட புற்று நோய் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியும்.

      ஆங்கில மருந்து வாசனையே படாத எத்தனையோ கிராமத்தவர்களுக்கும் புற்று நோய் வருகிறது. மருத்துவமனைக்கே போகாமல் இறந்தும் போகிறார்கள். இங்கெல்லாம் உடல் என்ன செய்து கொண்டிருக்கிறது?

      புற்று நோய்க்கு மாற்று மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள், தீர்வுகளை விளக்க முடியுமா?

      • gnuanwar 6:59 am on April 4, 2015 Permalink | Log in to Reply

        ஒரு கருத்த்துக்கு எதிர் கருத்து கூருவது நன்று மேலும் அது பற்றிய ஜயங்களை அவரின் fb பக்கத்தில் கேட்டால் எல்லோருக்கும் தெளிவு கிடைக்கும் மேலும் இது பற்றி உங்களை தனி மடலில் தொடர்பு கொள்கிறேன்

        • இரவி 2:35 pm on April 9, 2015 Permalink | Log in to Reply

          @gnuanwar வெறும் கருத்தென்றால் அதனால் ஒரு பாதகமும் இல்லை. அவர் உயிருக்கு உலை வைக்கும் பொறுப்பற்ற, உண்மையற்ற கூற்றுகளை மாற்று மருத்துவம் என்ற பெயரில் அறிவியலாக நிறுவ முனைகிறார். இதற்கு நான் முறைப்படி ஆதாரங்களைக் கேட்கிறேன். ஏற்கனவே அவரது காலக் கோட்டில் கேள்வி எழுப்பிய முறையான மருத்துவர்களைத் தடை செய்து விட்டார். எனவே, அங்கு உரையாடுவது வீண். வேண்டுமானால், அவர் இங்கு வந்து உரையாடட்டும். எப்படி இருந்தாலும், நான் FTE குழுவிடம் இருந்து தான் பதில் எதிர்பார்க்கிறேன்.

    • இரவி 2:38 pm on April 9, 2015 Permalink | Log in to Reply

      மூளைச்சாவு, coma ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை கீழ்க்காணும் இரண்டு விக்கிப்பீடியா கட்டுரைகள் பள்ளிக்கூட மாணவர்கள் கூட புரிந்து கொள்ளும் அளவில் விளக்குகிறது.

      https://en.wikipedia.org/wiki/Brain_death

      https://en.wikipedia.org/wiki/Persistent_vegetative_state

      ஆனால், கட்டுரை ஆசிரியரோ தமிழக அரசையும் அரசு மருத்துவர்களையும் கொலைகாரர்கள் என்று ஏசுகிறது. இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

      • gnuanwar 3:20 pm on April 9, 2015 Permalink | Log in to Reply

        அவரின் நூல் வந்த உடன் நாம் விவாதித்து முடிவு எடுப்போம் நன்றி

        • இரவி 7:31 am on April 10, 2015 Permalink | Log in to Reply

          இங்குள்ள 8 கட்டுரைகள் போக இன்னும் சில கட்டுரைகளை அனுப்புகிறேன் என்று தான் ஆசிரியர் சொல்லி உள்ளார். எனவே, இங்குள்ள 8 கட்டுரைகளில் இருந்து உரையாடலைத் தொடங்கலாம்.

  • gnuanwar 4:02 pm on March 27, 2015 Permalink |  

    நமது திட்டத்துக்கு வியாபார அட்டை தேவை 

    நமது திட்டதுக்கு நமது திட்டத்துக்கு வியாபார அட்டை தேவை அதன் வடிவமைப்பு

    • background creative commons எழுத்தை குறிப்பது போல cc மற்றும் நமது திட்டத்தின் logo இரண்டும் பக்கத்தில் இருப்பது போல  வேண்டும்
    • பங்களிப்பாளரின் blog email id social contact வேண்டும்
    • மேலும் யோசனைகளை  அனைவரும் தெறுவிக்கவும்
     
  • gnuanwar 3:51 pm on March 27, 2015 Permalink |  

    நம் திட்டத்தை பற்றி சில பேச்சுகள் 

    நமது திட்டத்தை பேச சில எழுத்தாளர்கள்/பதிப்பாளரை சந்திக்கும் போது ஏன் இந்த திட்டத்தில் பங்களிப்பு செய்கிறாய் நான் சொல்வேன் இது community project என்று சொல்வேன் அதற்க்கு .com என்று இணையதளம் வைத்து கொண்டு என்ன   comunity project அதற்க்கு சினி வாசன் .com commercial அல்ல community என்று மாற்றினார் சினிவாசனுக்கு நன்றி.

    நான் எதிர் கொள்ளும் கேள்விகள்

    • இந்த திட்டத்துக்கு எங்களது நூல்களை கொடுத்தால் என் அச்சு நூல்கள் விற்க்காது (இது நேற்று புத்தகம் வெளியிட்ட எழத்தாளரும் அடக்கம்)
    • நீ ஏன் இந்த திட்டத்தில் லாபம் இல்லாமல் உழைக்கிறாய்

    இதற்க்கு என் மனதில் ஒடும் பதில்

    • ஆற்றில் விழுந்தவனை காப்பாற்ற வேடிக்கை பார்க்கும் நூறு பேரில் ஒருவன் மட்டுமே காப்பாற்றுவான் இந்த இதுவரை யாரிடமும் சொன்னதில்லை  சொன்னால் எழுதாளர்கள்/பதிப்பாளர்கள் மேற்கொண்டு பேச மாட்டார்கள்

    தொடரும்

     
    • இரவி 1:04 pm on April 3, 2015 Permalink | Log in to Reply

      // இது community project என்று சொல்வேன் அதற்க்கு .com என்று இணையதளம் வைத்து கொண்டு என்ன comunity project//

      .com என்றால் வணிகம் என்பது இணையத்தின் தொடக்க காலங்களில் நிலவிய வழமை. இப்போது அது பொதுப்பெயராக மாறி விட்டது.

      தளத்தில் விளம்பரங்கள் இல்லை. எந்த வகையிலும் விற்பனையோ வருவாயோ இல்லை. நன்கொடைகள் கோருவது இல்லை. முற்றிலும் தன்னார்வ உழைப்பில் திட்டத்தை எடுத்துச் செல்கிறோம். தளப் பெயர், வழங்கிகுக்கு ஆகும் செலவும் மிகக் குறைவே. அதை நம்மில் சிலரே ஏற்றுக் கொள்ள முடியும்.

      இணைய வாசகர்கள் பொதுவாக .com என்றே தளப் பெயர்களை இட்டுப் பழகி இருக்கிறார்கள். அதனாலும் இந்தப் பெயர் உதவும்.

      //இந்த திட்டத்துக்கு எங்களது நூல்களை கொடுத்தால் என் அச்சு நூல்கள் விற்க்காது (இது நேற்று புத்தகம் வெளியிட்ட எழத்தாளரும் அடக்கம்)//

      அவர்கள் பதிப்பித்து / எழுதி விற்கவே விற்காமல் கிடக்கும் நூல்களையாவது கேளுங்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் பதிப்பாளரும் தங்கள் வாசகர்களுக்கு மின்னூல் வாசிப்பை அறிமுகப்படுத்தினால், நாளை அவர்கள் தங்களின் நன்கு விற்பனையாகும் நூல்களுக்கு மின்னூல் பதிப்பு கொண்டு வரும் போது உதவும்.

      ஒரே ஒரு நூல் எழுதியவர்கள், பதிப்பித்தவர்கள் என்றால் நூல் வெளிவந்து எத்தனை ஆண்டுகள் ஆகிற்று என்று கேளுங்கள். பல ஆண்டுகளாக விற்காத நூல் என்றால் அது இனிமேலும் விற்றுத் தீரும் என்று எதிர்பார்க்க நியாயமில்லை. மின்னூலாக கொண்டு வந்தால் குறைந்தது அவர்களது சிந்தனைகளைப் பலரிடம் கொண்டு சேர்த்த நிறைவாவது கிடைக்கும். இல்லாவிட்டால், அச்சிட்டு விற்காமல் கிடக்கும் நூல்களோடு சேர்ந்து அவர்களும் சிந்தனைகளும் முடங்கித் தான் கிடக்கும்.

  • gnuanwar 3:34 pm on March 27, 2015 Permalink |  

    செல்பி வேண்டும் 

    நம் திட்டத்தில் பங்களிப்பி மற்றும் வாசகர்கள் அனைவரும் தங்களது செல் பேசியில் 1நிமிடம் நம் திட்டத்தை பற்றி பேசவேண்டும் அதை நமது தளத்தில் வெளியிடு செய்வோம் இது பங்களிப்பாளர்களையும் வாசகர்கள் கிடைப்பார்கள் மேலும் இந்த காணோளியை சமுக வலைதளங்களில் பகிரவும் நன்றி

     
  • gnuanwar 5:19 pm on March 25, 2015 Permalink |  

    கட்டற்ற மென்பொருள் ஆமாச்சு மின் நூல் 

    கட்டற்ற  மென்பொருள் ஆசிரியர்அமாச்சு அச்சு புத்தகம் தட்டச்சு செய்து மின் நூல் ஆக்கபடவுள்ளது முதன் முறையாக அய்யா சங்கரா ராமசாமி அவர்களை இந்த் நூலில் இருந்து பிழை திருத்தம் செய்யும் பங்களிப்பாக தர இசைந்துள்ளார்

    அவரின் இணையதளம் http://tamilspeak.com/?p=89285

     
  • gnuanwar 3:47 pm on March 25, 2015 Permalink |  

    எழுத்தாளர் ரமணன் மின் நூல் அனுமதி 

    எழத்தாளர் திரு ரமணன்  அவர்கள் தனது நீங்களும் ஜெயிக்கலாம் என்று புதிய தலைமுறையில் தொடராக வெளியான கட்டுரைகளை மின் நூல் அனுமதி தந்தூள்ளார் பழைதருத்தம் முடந்த பின்பு தருவார்

    அவரின் வலைபூ http://ramananvsv.blogspot.in/

     
  • gnuanwar 3:39 pm on March 25, 2015 Permalink |
    Tags:   

    களந்தை பீர் முகமதுவின் கட்டுரைகள் 

    எழுத்தாளர் களந்தை பீர் முகமது தன் தி இந்து கட்டுரைளை மின் நூல் அனுமதி தந்துள்ளார் தி இந்துவில் இருந்து தக்க அனுமதி கிடைத்தவுடன் மின் வெளிடவும்

    இசைக்கு எதிரானதா இஸ்லாம்?

    களந்தை பீர்முகம்மது | January 6, 2015 இசை, மயக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால் அதன்மூலம் ஒருவனை வழிகெடுக்க முடியும் என்று சில மார்க்கவாதிகள் கூறுவது நகைப்புக்குரிய விஷயமாகும். »

    மலர்களின்மீது ஆணையாக…

    களந்தை பீர்முகம்மது | December 22, 2014 தேவையற்றபோது மலர்களைக் குப்பைகுப்பையாக அள்ளித்தானே தீர வேண்டும். ஆனால், மழலைகளையும் இப்படிக் குப்பைகுப்பையாக அள்ள முடியுமா? »

    காஷ்மீரைக் கண்ணியப்படுத்துங்கள்!

    களந்தை பீர்முகம்மது | December 13, 2014 காஷ்மீரிகள் நிம்மதியான சுகமான வாழ்வை ஒரு நாளேனும் விரும்பியிருக்க மாட்டார்களா? காஷ்மீரத்தின் எழிலை ரசிக்க நாட்டம் கொண்டிருக்க மாட்டார்களா? »

    தேர்தல் எப்போதோ முடிந்துவிட்டது மோடி!

    களந்தை பீர்முகம்மது | September 9, 2014 மோடியும் இளைஞர்கள் என்ன எழுதிக் கொடுத்தாலும் அதை அப்படியே மேடையில் ஒரு நாடக பாங்கில் உரையாற்றி மக்களைக் கவர்ந்தார். அதில் வெற்றியும் கிடைத்தது »

    கம்பன் நமது பெருமிதம் இல்லையா?

    களந்தை பீர்முகம்மது | August 12, 2014 கம்பனைப் புறக்கணிப்பது நம் தமிழையும் புறக்கணிப்பதுபோல. இலக்கியத்தையும் வாழ்க்கையையும் தனித்தனியாகப் பார்ப்பதன் விளைவுதான் இது. »

    நம் அனுபவத்தின் பிரதிபலிப்பு

    களந்தை பீர்முகம்மது | June 20, 2014 தமிழ்த் திரையுலகை நம் வாழ்வுக்கு அருகில் கொண்டுவந்ததில் கண்ணதாசனின் பங்கும் அளப்பரியது »

    நாங்களும் ரசிகர்களாக இருந்தோம்

    களந்தை பீர்முகம்மது | June 15, 2014 ஒரு நடிகனுக்கும் ஒரு நடிகைக்கும் ரசிகனாக இருப்பது எந்த வகையில் சரியானது என்கிற அற எழுச்சி சார்ந்த குரல்களும் நம் தமிழகத்தில் இருக்கின்றன. »

    மந்திரச் சிமிழில் வெளிப்பட்ட கனல்

    களந்தை பீர்முகம்மது | May 14, 2014 இன்று தூய படைப்பாளி என்று தங்களைக் கருதிக்கொள்கிறவர்கள் அரசியல் சாயல் படாமல் தங்களைக் காத்துக்கொள்கிறார்கள். »

    ஸ்வாதியின் மரணம்: கடவுளுடன் ஒரு போர்

    களந்தை பீர்முகம்மது | May 4, 2014 கடவுளின் மனசாட்சி என்ன பதிலை அவற்றுக்கெல்லாம் சொன்னது என்று தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற ஒரு கேள்வி இதுவரை கடவுளை நோக்கி எழுப்பப்படவில்லை. »

    சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு?

    களந்தை பீர்முகம்மது | April 19, 2014 16-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கூட்டணிகள் குழப்பமாக இருக்கின்றன. ஒரு புகைமூட்டத்துக்குள் நின்று விளையாட வேண்டிய நெருக்கடி இந்திய வாக்காளருக்கு »

    சமகாலப் பிரச்சினைகளின் கலை வடிவம்

    களந்தை பீர் முகம்மது | March 12, 2014 கிராமத்து ராட்டினம் கதை நெடும்போக்காக வந்து இறுதியில் நகர – கிராம வாழ்க்கையின் ஒப்பீடாகிறது. »

    என்றும் ஆயிரத்தில் ஒருவன்

    களந்தை பீர்முகம்மது | January 17, 2014 எம்.ஜி.ஆரின் அரசியலோடு எவ்வளவோ முரண்பட்டாயிற்று; ஆனால் மனதில் படிந்த அவரின் திரைப் பிம்பங்களை மட்டும் நீக்கிவிட முடியவில்லை »

    கணக்குத் தீர்க்க சரியான நேரம்

    களந்தை பீர்முகம்மது | December 26, 2013 அமுத கலசம் திரண்டு நின்றது. வெளியே ஒரு துளி விஷம் கண்ணுக்கு மறைவாக எங்கே எப்படி இருந்ததோ? திடீரென்று இந்தியா போர்க்கோலம் பூண்டுவிட்டது. »

    வரலாறாக விரிந்த ஜூபிடர் பிக்சர்ஸ்

    களந்தை பீர்முகம்மது | December 1, 2013 ஏ.வி.எம், ஜெமினி பிலிம்ஸ், மாடர்ன் தியேட்டர்ஸ் என இன்றும் நாம் பேசிக்கொண்டிருந்தாலும் ஜூபிடர் பிக்சர்ஸை எப்படி மறந்தோம்? »

    அரிய தருணங்கள்

    களந்தை பீர்முகம்மது | October 14, 2013 நம்முடைய பால்ய காலத்தின் ஞாபகப் பதிவில் ஏதாவது ஒரு வலி ஏறியிருந்தாலும் இலக்கியத்தில் அதற்கு ஒரு சாகாவரம் உண்டு. »

    நமக்குள் இருக்கும் ஏழாவது மனிதன்

    களந்தை பீர்முகம்மது | October 1, 2013 நம் அரசியல் தலைவர்கள் எப்போதும் அரசியல் தலைவர்களாக மட்டுமே இருப்பதில்லை. ஞானோதயம் மிக்கவர்களாக மாறிப் பல பொன்மொழிகளை உதிர்ப்பதும் உண்டு. »

     
    • Jegadeeswaran Natarajan 8:37 am on March 26, 2015 Permalink | Log in to Reply

      வணக்கம் நண்பரே, மேற்கண்ட இடுகையில் எனக்கு சில ஐயப்படுகள் உள்ளன. 1) இக்கட்டுரைகளை இலவசமாய் வெளியிட எழுத்தாளர் சம்மதம் தெரிவித்துள்ளார் என்பதற்கு ஒரு மின்னஞ்சலையோ, கடிதத்தினையோ பெற்றுக் கொண்டுள்ளீர்களா?
      2) இந்துவில் அனுமதிக்கு கோரியுள்ளீர்களா? அல்லது இனி நாம் அனுமதி கோர வேண்டுமா?
      இதனை தெளிவுபடுத்தினால் பிற பங்களிப்பார்கள் எளிமையாக மின்னூலக்கம் செய்ய இயலும். நன்றி.

    • gnuanwar 8:49 am on March 26, 2015 Permalink | Log in to Reply

      கண்டிப்பாக தி இந்துவில் இருந்து தக்க அனுமதி கிடைத்தவுடன் மின் வெளிடவும் இரண்டு அல்லது மூன்று நாளில் கிடைத்து விடும்
      கிடத்த பின்பு மின் நூல் ஆக்கலாம்

      • Jegadeeswaran Natarajan 10:14 am on March 26, 2015 Permalink | Log in to Reply

        இந்துவுக்கு அனுமதி கோரி விண்ணப்பம் அனுப்பியுள்ளீர்களா நண்பரே?

    • gnuanwar 10:59 am on March 26, 2015 Permalink | Log in to Reply

      ஆசிரியர் அனுமதி பற்று தருவார்

  • gnuanwar 3:15 pm on March 25, 2015 Permalink |  

    எழுத்தாளர் நாகூ ரூமி வலைபக்க மின் நூல் அனுமதி 

    எழுத்தாளர் நாகூர் ரூமி தன் வலை பக்கத்தை எந்ந தலைப்பிலாவது மின் நூல் ஆக்க அனுமதி  தந்தூள்ளார் அவரின் வலை பக்கம்

    https://nagoorumi.wordpress.com/

    என் தேர்வு https://nagoorumi.wordpress.com/category/articles-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/
    மேற்கண்ட தலைப்பில் மின் நூல் உருவாக்கவும்.

     

    நன்றி

     

     
    • Jegadeeswaran Natarajan 8:41 am on March 26, 2015 Permalink | Log in to Reply

      வணக்கம் நண்பரே, தாங்கள் கொடுத்துள்ள இரண்டாவது இணைப்பு வேலை செய்ய வில்லை. மறு இணைப்பு தரும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    • gnuanwar 9:04 am on March 26, 2015 Permalink | Log in to Reply

      சரி செய்து விட்டேன்

      • Shrini 6:26 pm on March 29, 2015 Permalink | Log in to Reply

        உரிமை, நூல் பெயர் விவரங்கள் தருக.
        ஆசிரியர் மின்னஞ்சல், அறிமுகம் தருக.

        • Shrini 10:39 am on April 2, 2015 Permalink | Log in to Reply

          கீழ்க்கண்ட கட்டுரைகளை மட்டும் தொகுத்து மின் நூலாக வெளியிடலாம்

          தலைப்பு: பூனைக்கும் அடிசறுக்கும்

          1. இரண்டு கண்களாலும் பாருங்கள்
          https://nagoorumi.wordpress.com/2014/12/06/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/

          2. என் ஊர்

          https://nagoorumi.wordpress.com/2012/07/05/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/

          3. 3. தமிழிலக்கியமும் நாகூர்ப்படைப்பாளிகளும்

          4. 4. நாகூர் சலீம் நினைவலைகள்

          5. 5. நாகூர் தந்த கொடை

          6. 6. சமகால மொழிபெயர்ப்பும் இஸ்லாமியப் படைப்பாளிகளும்

          7. 7. இஸ்லாமும் தமிழும் நிறைவான கொடுக்கல் வாங்கல்

          8. 8. மீண்ட பொக்கிஷம்

          9. 9. பரிபூரண அழகிய முன்மாதிரி

          10. 10. பி.ஜெ.குர்’ஆனை முன்வைத்து சில கேள்விகள்

          11. 11. நம்பிக்கையின் படித்தரங்கள்

          12. 12. திருக்குரானை அழிக்க முடியுமா?

          13. 13. ஹஸ்ரத் மியான் தான்சேன் (1496-1586/1589)

          14. 14. வள்ளல் அப்துல் ஹகீம் சாஹிப்

          15. 15. அம்மியில் கொத்தப்பட்ட சிற்பங்கள்: யுகபாரதி திரைப்படக் காதல் பாடல்கள்

          16. 16. அரிதாரமற்ற அரிதான கலைஞன்

          17. 17. பூனைக்கும் அடிசறுக்கும்

          18. 18. கிராண்ட் ஃபினாலே

          19. 19. வரலாறு படைத்த அழுகையும் அசத்தலும்

          20.20. அசிங்கமும் எதிர்வினையும்

          21. 21. நீயா நானா

          22. 22. பில்லி சூனியம்

          23. 23. மை நேம் ஈஸ் கான் – மகத்தான சேவை

          24. 24. தியானம் ஓர் அறிமுகம்

          25. 25. கடவுளோடு பேசுவது எப்படி?

          உரிமை – Creative Commons – Attribution-NoDerivs

          உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

          ஆசிரியர் – நாகூர் ரூமி ruminagore@gmail.com

    • gnuanwar 10:58 am on April 2, 2015 Permalink | Log in to Reply

      ஆசிரியரின் குறிப்புகள் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF

      ஆசிரியரின் படத்தை இந்த இணைப்பில் இருந்து பெற்று அதனை அட்டை படத்தில் சேர்க்கவும்

    • gnuanwar 8:09 am on April 26, 2015 Permalink | Log in to Reply

      மின் புத்தகம் தயார் இணைப்பு http://nagoorrumi.pressbooks.com/ இந்த நூலுக்கு அட்டை படம் தருக

    • manoj penworks 2:02 pm on May 13, 2015 Permalink | Log in to Reply

    • gnuanwar 4:14 pm on May 14, 2015 Permalink | Log in to Reply

      சிவமுருகன் புத்தகத்தை வெளியிடவும்

  • gnuanwar 3:41 pm on March 24, 2015 Permalink |  

    என் கேடி பாலன் நூல்கள் 

    மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் திரு பாலன் அவர்களுடன் அய்யா சங்கர ராமசாமிஅவர்களுடன் நம்  திட்டத்தில் அவரின் சொல்ல துடிக்குது மனசு என்ற நூலை சேர்கக அனுமதி தந்தார் மேலும் அவர் பதிப்பித்து இளசை சுந்தரம்   எழுதிய

    1. தியாக சீலர் கக்கன்
    2. காமராஜர் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள்

    ஆகிய நூல்களை நம் திட்டத்தில் சேர்க்க அனுமதி அளித்து உள்ளார்கள்

     

    விரைவில் மின் நூலாக வெளி வரும்

     
    • sivamurugan 2:41 pm on March 25, 2015 Permalink | Log in to Reply

      (y). Well lot of new addition. Glad we are growing (y) good job team. I appreciate every individual one’s contribution 🙂

    • gnuanwar 9:43 am on April 2, 2015 Permalink | Log in to Reply

      என் கேடி பாலன் வெளியிட்ட கக்கன் பொது கூகுள் டிரைவில் சேர்த்து விட்டேன் மின் நூல் உருவாக்கவும்
      உரிமை CC-BY-NC-ND
      ஆசிரியரின் இணையதளம் http://ilasaisundaram.com/
      ஆசிரியர் குறிப்பு http://ilasaisundaram.com/?page_id=43
      ஆசிரியரின் மின் அஞ்சல் humourkingilasai@yahoo.com
      ஆசிரியரின் படத்தை சேர்க்கவும் http://ilasaisundaram.com/wp-content/uploads/2012/12/scan11.jpg
      பாதிப்பாளர், முன் அட்டை பின் படங்கள் டிரைவில் kakn wrap folder-ல் உள்ளது

    • gnuanwar 5:25 pm on April 13, 2015 Permalink | Log in to Reply

      தமிழ் புத்தாண்டு சிறப்பு நூல் தியாக சீலர் கக்கன் மின் நூல் தயார் சிவ முருகன் வெளியிடவும்
      http://kakkan.pressbooks.com/
      சிவமுருகன் உங்களை தளத்தில் சேர்த்துவிட்டேன்

      • gnuanwar 4:42 pm on April 24, 2015 Permalink | Log in to Reply

        காமராஜர் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள்
        மின் நூல் தயார்
        உரிமை CC-BY-NC-ND
        http://kamaraj.pressbooks.com/
        சிவ முருகன் புத்தகத்தை வெளியிடவும்

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel