நூல்களில் உள்ள எழுத்துப் பிழைகளைக் களைய நடவடிக்கை எடுக்குமாறு சொக்கன் வேண்டியுள்ளார். பார்க்க – http://freetamilebooks.com/first-birthday-100-books/#comment-358 . நானும் பல நூல்களில் இந்தச் சிக்கலை உணர்ந்துள்ளேன். என்ன செய்யலாம்?
1. தன்னார்வலர்களைக் கொண்டு நூல்களைத் திருத்துவது என்பது மிகுந்த வேலைப்பளு தருவது என்பதால் இயலாத காரியம்.
2. சில எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தைப் பிறர் திருத்துவதை விரும்புவதில்லை. தொகுப்பாசிரியரின் பணி, எழுத்துப் பிழை திருத்தும் பணி சிக்கலானவை. மிகை திருத்தமாகவும் முடிந்து விடக்கூடும்.
எனவே,
எழுத்தாளர்கள் முதல் முறை தங்கள் நூல்களை அனுப்பி வைக்கும் போதே, மேலோட்டமாக ஒரு பார்வை இட்டு, எழுத்துப் பிழைகள் தென்பட்டால் நூலைத் திருப்பி அனுப்பி பிழைகள் திருத்தி அனுப்பக் கோரலாம். பிழைகள் திருத்துவதுடன், சுருக்கி எழுதுதல், மேம்பட எழுதுதல் ஆகியவற்றையும் கவனிக்குமாறு கோரலாம். இது அவர்களுக்கும் நல்லதே. என்னுடைய முதல் மின்னூலை வலைப்பதிவுகளில் இருந்து தொகுத்து இடும் போது, சீராக்கி எழுதவே ஒரு நாள் ஆனது. தத்தம் எழுத்தை மீண்டும் படித்து சீராக்க நல்ல வாய்ப்பு. ஏனெனில், சில ஆக்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதியவையாக இருக்கும்.
(அல்லது)
தொழில்முறையாக இந்தச் சேவையை அளிப்பவர்களின் தொடர்பு விவரங்களைச் சேகரித்து எழுத்தாளர்களுக்குத் தரலாம். இலவச நூலுக்குக் காசு செலவழித்து யாரும் பிழை திருத்துவார்களா தெரியாது. ஆனால், தொழில்முறையாக செய்ய ஒரு வாய்ப்பு.
உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.
நன்றி
Leave a Reply
You must be logged in to post a comment.