பேஜ் மேக்கர் டாக்குமென்டை மின்னூலாக்க உதவி தேவை

வணக்கம்,

திரு ஏற்காடு இளங்கோ என்பவரின் இரு நூல்கள் பேஜ் மேக்கர் டாக்குமென்ட் (PMD) வடிவில் இருக்கின்றன. இவற்றினை மின்னூலாக மாற்றக் கூடிய சாத்தியங்கள் உள்ளதா?. அவருடைய நூல்கள் பதிப்பகத்திற்கு செல்லும் முன்பே இணையத்தில் மின்னூலாக கிடைக்க வேண்டுமென ஆசைப்படுகிறார்.

பதிப்பகங்கள் நூல்களின் உரிமையை தங்களுடையது என்று அச்சிட்டுக் கொள்கின்றன என்பதால், இணையத்தில் மின்னூலாக கிடைக்கச் செய்து பின்பு அதனைக் குறிப்பிட்டு பதிப்பகங்களுக்குக் கொடுக்க சம்மதித்துள்ளார்.

https://drive.google.com/file/d/0B_qRrJXT9oMGZWstel9UR29oVUk/edit?usp=sharing

https://drive.google.com/file/d/0B_qRrJXT9oMGT1ZVOWFpODVqTTA/edit?usp=sharing

இவ்விரு நூல்களையும் மின்னூலாக்கம் செய்ய இயலுமா என சோதித்துக் கூறுங்கள். நன்றி.

@ravidreams @shrini @sivamurugan


Posted

in

by

Comments

10 responses to “பேஜ் மேக்கர் டாக்குமென்டை மின்னூலாக்க உதவி தேவை”

  1. Shrini Avatar

    “Here is the word doc: http://bit.ly/nopal_word
    Copy fonts from here http://bit.ly/fonts_nopal

    என் அலுவலக நண்பர் செந்தில் இவ்வாறு word doc ஆக மாற்றியுள்ளார்.
    சிவலிங்கம் ஐயாவிடம் கேட்டு ஒருங்குறியாக மாற்ற முயல்கிறேன்.

    1. Jegadeeswaran Natarajan Avatar

      நன்றி நண்பரே. அவரிடம் இருக்கும் நபருக்கு, வேர்ட் டைப்பிங் தெரியவில்லையாம்ங்க. அதனால் பதிப்பங்களுக்கு கொடுப்பதைப் போல இவ்வாறே செய்து வைத்துள்ளார். உங்களுடைய நண்பர்களும் உங்களைப் போலவே திறமை மிக்கவர்களாக இருக்கின்றார்கள்.

    2. Shrini Avatar

      [சிவலிங்கம் ஐயாவின் மடலில் இருந்து;

      அன்புள்ள ஸ்ரீனி,

      நீங்கள் குறிப்பிட்டிருந்த நூலைப் பதிவிறக்கிப் பார்த்தேன். அந்நூல் செந்தமிழ் என்னும் எழுத்துருவில் அமைந்துள்ளது. அது மிகவும் அரிதாகப் பயன்படுத்தப்படும் எழுத்துருவாகும். இதற்கான மாற்றியைப் பெரும்பாலும் யாரும் எழுதியிருக்க மாட்டார்கள். என்னுடைய மாற்றியிலும் இதற்கான வசதி இப்போதைக்கு இல்லை. செந்தமிழ் எழுத்துருவுக்கு எனில் இனிமேல்தான் புதிதாகப் புரோகிராம் எழுத வேண்டும்.

      செந்தமிழ் எழுத்துருக் கோப்புகளின் கேரக்டர் மேப்பிலிருந்தே கிரந்தம் உட்பட 313 தமிழ் எழுத்துகளையும் நானே எடுத்துக் கொள்கிறேன்.

      வருகின்ற 10 நாட்கள் சென்னையில் முக்கிய வேலைகள் உள்ளன. இந்தப் பயணத்துக்கிடையே நேரம் கிடைக்கும்போது செந்தமிழ் எழுத்துருவுக்கான மாற்றி நிரலை எழுத முனைகிறேன்.

      மிக்க அன்புடன்,
      மு.சிவலிங்கம்.

      1. Jegadeeswaran Natarajan Avatar

        நன்றி நண்பரே. காலங்கள் எடுத்துக் கொண்டாலும் மிகவும் தேவையானப் பணி இது. சிவலிங்கம் அய்யா இயன்றபொழுது தரட்டும். அதுவரை பிற வேலைகளில் ஈடுபடலாம். ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் தெரிவியுங்கள். ஏன் இவ்வாறு அரிதான எழுத்துருக்களைப் பயன்படுத்துகின்றார்கள் என தெரியவில்லை. எவ்வகையான எழுத்துருக்களைப் பயன்படுத்தி அவர்கள் தந்தால் நமக்கு எளிதாக இருக்கும் என்று தெரிவியுங்கள். இளங்கோ அவர்களிடம் இனி எழுதப்படும் நூல்களுக்கு நமது சிபாரிகளை முன் வைப்போம். அவை வருங்காலத்தின் நமது நேரத்தினை சேமித்துவிடும். நன்றி.

        1. Shrini Avatar

          Word doc ல் latha எழுத்துருவில் நூல்களை தந்தால் போதும்.

          1. Jegadeeswaran Natarajan Avatar

            அவரிடம் தட்டச்சு செய்யும் நபருக்கு வேர்டில் தட்டச்சிட தெரியாது என்கிறார். முயன்று பார்ப்போம்.

        2. Shrini Avatar

          செந்தமிழ் எழுத்துரு பிற எழுத்துருக்களிலிருந்து பெருமளவு மாறுபட்டுள்ளது. அதனை யுனிகோடாக மாற்ற அதிகமாகவே மெனக்கெட வேண்டியுள்ளது. எனவே செந்தமிழ் எழுத்துரு மாற்றும் முயற்சியை இப்போதைக்குக் கைவிடுகிறேன். பின்னாளில் பார்க்கலாம். மன்னிக்கவும்.

          மிக்க அன்புடன்,
          மு.சிவலிங்கம்.

  2. Jegadeeswaran Natarajan Avatar

    ஓ.. இறுதி நிலையில் கதவடைக்கப் பட்டுவிட்டதே 🙁 சரி நண்பரே. மாற்று வழியை ஆலோசிப்போம். சிரமேற்கோண்டு பணியை செய்தமைக்கு நன்றி நண்பரே.

    1. Shrini Avatar

      செந்தமிழ் எழுத்துருவின் கேரக்டர் மேப்பை அறிவதில் எனக்கு எந்தச் சிரமும் இருக்கவில்லை

      செந்தமிழ் எழுத்துருவில் ‘ம, மா, மி, மீ’ வரிசை எழுத்துகளை பைனரி ஆவணத்தில் சேமிக்கும் முறைதான் சிக்கலாக உள்ளது. அதையும் புரோகிராமில் ஈடுகட்டி விடலாம். அதற்குக் கொஞ்சம் நேரம் செலவழிக்க வேண்டும். அது தவிர பிற எழுத்துகளைச் சிக்கல் எதுவுமின்றி மாற்ற முடிகிறது.

      மேலும் நீங்கள் அனுப்பிய நூலை ஒருமுறை வேர்டில் திறந்து பாருங்கள். நெடிலுக்குரிய துணைக்கால், கை, கொ, கோ ஆகியவற்றின் கொம்புகள் போன்றவை பிரிந்து அடுத்த வரியில் இடம் பெற்றுள்ளன. யுனிகோடில் மாற்றும்போது இதுவும் பிரச்சினைதான். நூலின் லே-அவுட் மிகவும் மோசமாக உள்ளது. மெய்யெழுத்துகள் வரி முதலில் வருகின்றன. சொல்லின் ஒற்றையெழுத்துப் பிரிந்து கிடக்கிறது. (எ-டு) நூலின் முதல் பத்தியைப் பாருங்கள்:

      ¶]ÄBÝ >Vk«ºï^ ¨[Å >[Ðç¦B x>_ ±_ Øk¹B

      Vª 2000D gõ½_ ÖòÍm Ö[® kç« 42 ±_ïçá ¨¿] x

      ½Ým Ø>V¦ìÍm ¨¿]¥D kòD ‘°uïV| ÖẼïV’ >ta_ ¨¿m

      D ¶¤sB_ ¨¿Ý>Váìï¹_ xÂþB\Vªkì. 1999 x>_ 2006

      kç« >tµåV| ¶¤sB_ ÖBÂïÝ][ ¼ÄéD \Vkâ¦ß ØÄBéVá«

      Vï© ÃèBVu¤ \Â﹦D ¶¤sB_ sa©Aðìçk °uÃ|ÝmD

      Ãèl_ xÂþB© úïVu¤Bkì, úïVu¤ kòÃkì. Ökö[ ¨¿

      Ým© ÃèçB© ÃV«Vâ½ >tµåV| ¶¤sB_ ÖBÂïÝ][ ¼ÄéD \

      Vkâ¦Â z¿ ½ÄDÃì 2009D gõ½_ ‘¨¿Ýmß Eu¸’ ¨[þÅ Ãâ¦Ý

      ç>¥D kwºþ¥^ám.

      மேலேயுள்ள பத்தியை யுனிகோடில் நான் மாற்றியது:

      அதிசயத் தாவரங்கள் என்ற தன்னுடைய முதல் நூல் வெளிய

      ான 2000ம் ஆண்டில் இருந்து இன்று வரை 42 நூல்களை எழுதி மு

      டித்து தொடர்ந்து எழுதியும் வரும் ‘ஏற்காடு இளங்கோ’ தமிழில் எழுது

      ம் அறிவியல் எழுத்தாளர்களில் முக்கிய ானவர். 1999 முதல் 2006

      வரை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் ாவட்டச் செயலாளர

      ாகப் பணியாற்றி க்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்

      பணியில் முக்கியப் பங்காற்றியவர், பங்காற்றி வருபவர். இவரின் எழு

      த்துப் பணியைப் பாராட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம்

      ாவட்டக் குழு டிசம்பர் 2009ம் ஆண்டில் ‘எழுத்துச் சிற்பி’ என்கிற பட்டத்

      தையும் வழங்கியுள்ளது.

      [’ம’ என்ற எழுத்து மட்டும் இருக்காது]

      யுனிகோடில் மாற்றுவதற்கு முன் மூலத்தைச் சரி செய்ய வேண்டும்.

      செந்தமிழ் எழுத்துருவை யுனிகோடாக மாற்றும் வேலையை முடித்துவிட்டேன். ஆனால் நீங்கள் அனுப்பி வைத்த நூலை மாற்ற இயலாது. துணைக்கால், கொம்புகள் தனித்தனியே பிரிந்து கிடப்பதால் அந்த இடங்களிலெல்லாம் பிழையாகவே வரும். நூல் அச்சிடுவதற்கு ஏற்ற வகையில் லே-அவுட் செய்யப்பட்டுள்ளது. பக்க எண்களைக் கவனியுங்கள். லே-அவுட்டும் பல இடங்களில் பிழையாக உள்ளது. இதனை நீங்கள் மின்னூலாக வெளியிட இயலுமா எனத் தெரியவில்லை. இந்த நூலிலுள்ள குளறுபடிகளை நேரில்தான் விளக்க முடியும்.

      மிக்க அன்புடன்,
      மு.சிவலிங்கம்.

  3. Jegadeeswaran Natarajan Avatar

    விண்வெளியில் ஆய்வு நிலையம் நூலை லட்சுமணன் எழுத்துருவில் இளங்கோ அனுப்பியுள்ளார். விரைவில் நோபல் பரிசு பெற்ற இந்தியர்களும் இதே எழுத்துருவில் அனுப்ப படுமென நம்புகிறேன். பெருமுயற்சி செய்து இந்த நூல்களை மின்னூலாக்க முயன்றுள்ளோம் என்பதை நினைவு கூர்ந்து இந்த திரியை RESOLVED எனக் குறித்து விட்டுள்ளேன். இனி வருகின்ற புது மின்நூலாக்கப் பணிகளை உடனே காண இந்நடவெடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நன்றி.

Leave a Reply