மதுரை புத்தகக் காட்சியில் கட்டற்ற தமிழ் மின்னூல்கள் அறிமுகம்

இன்று துவங்கி 10 நாட்கள் நடக்கும் மதுரை புத்தகக் காட்சியில் கட்டற்ற தமிழ் மின்னூல்களை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உண்டு. ஆர்வமுள்ள நமது குழு நண்பர்கள் தெரிவிக்கவும். அங்கு தமிழ் விக்கிப்பீடியா, கட்டற்ற மென்பொருளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள கடையுடன் இணைந்து இப்பரப்புரையை நடத்தலாம். காட்சிக்கு வருபவர்களுக்கு மின்னூல் வாசிப்பு, நமது செயலிகள் பற்றி தெரிவிக்கலாம். புதிதாக பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட ஒப்புதல் வாங்கலாம் – இரவி