லஷ்மண் ஸ்ருதி வெளியிட்டு இருக்கும் தமிழ் நூல்கள்
லஷ்மண் ஸ்ருதி தங்களது தளத்தில் தமிழ் நூல்களை தங்களது தளத்தில் html ஆக வெளியிட்டு உள்ளார்கள் இந்த இணைப்பில் http://www.lakshmansruthi.com/tamilbooks/thirukkural/index.asp
http://www.lakshmansruthi.com/tamilbooks/thirukkural/index1.asp
இந்த அனைத்து நூல்களையும் நம் திட்டதில் இணைக்க வேண்டும் அதற்க்கான முயற்ச்சிகள் தொடங்கி விட்டேன்
இரவி 2:32 pm on April 9, 2015 Permalink | Log in to Reply
மேலும் பல நூல்களைச் சேர்க்கும் உங்கள் ஆர்வத்தையும் உழைப்பையும் பாராட்டுகிறேன். இயன்ற அளவு சிறப்பான, தரமான நூல்களைச் சேர்க்க முனைவோம். அதுவே தன்னார்வலர் உழைப்புக்கு நியாயம் கற்பிப்பதாக இருக்கும். முகநூலில் போகிற போக்கில் எழுதப்படும் சில உள்ளடக்கங்களின் பயன், தரம் கேள்விக்குரியதே. நன்றி. @gnuanwar
gnuanwar 3:14 pm on April 9, 2015 Permalink | Log in to Reply
நன்றி, மேலும் நம் திட்டத்தில் mainstream இல்லாத புறக்கணிக்கபட்ட அதாவது மாதொருபாகன் போன்ற நூல்களை பதிபிக்க ஆவலாக உள்ளென் அதறக்கு உங்களது ஆதரவை நாடுகிறேன்
Jegadeeswaran Natarajan 12:33 pm on April 13, 2015 Permalink | Log in to Reply
மாதொருபாகன் நூல் இணையத்தில் பரவலாக வலம் வருகிறது. இந்நூல் இலவசமாக மக்களுக்கு அதன் ஆசிரியர் தந்தால். நாம் வரவேற்போம். மாதொருபாகன் நூல் புறக்கணிக்கப்படவில்லை. சில இயக்கங்களின் எதிர்ப்பினை சந்தித்துள்ளது அவ்வளவே. மற்றபடி லக்மன் சுருதி வெளியிட்டுள்ள வள்ளல் எம்.ஜி. ஆர் நூல் மிகவும் அற்புதமானது.