உடல் ஒருபோதும் தவறு செய்வதில்லை..!

மேற் கண்ட தலைப்பில் மின்நூல் உருவாக்கவும், இந்த தலைப்புக்கு அட்டை படம் தரவும்

உடல் ஒருபோதும் தவறு செய்வதில்லை..!

 

  1. உண்மையில் நோய் என்றால் என்ன…?

http://goo.gl/M8BPk7

 

  1. வலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன…?

http://goo.gl/izXxP1

 

  1. விஷம் குடித்த சிறுவனின் உடலில் நடந்தது என்ன..?

http://goo.gl/WV291K

 

  1. பேராற்றலின் துணையுடன் வீட்டில் இனிமையான சுகப்பிரசவம்..!

http://goo.gl/tQDeHN

 

  1. குட்டி தேவதை இயற்கை முறையில் வீட்டில் சுபஜனனம்..

http://goo.gl/ZL6WZq

 

  1. பெண்களே எச்சரிக்கை..! உங்கள் கர்ப்பப்பை கருவருக்கப் பட்டுக்கொண்டிருகிறது…!

http://goo.gl/dU4YIF

 

  1. தடுப்பூசிகள் மூளைச் சிதைவை ஏற்படுத்தும்..! பல வருடங்களாக மறைக்கப்பட்ட பித்தலாட்டம் அம்பலம்..!

http://goo.gl/MDBj8T

 

  1. தடுப்பூசிகள் மற்றும் சொட்டு மருந்துகளால் இறந்த மற்றும் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்..!
    http://goo.gl/rVRI7t

ஆசிரியர்

அக்குஹீலர்.ர.கார்த்திகேயன்

உரிமை Creative Commons Attribution-NonCommercial-NoDerivs குறிப்பிடுதல் இலாபநோக்கமற்ற, வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND)

மூலங்களை பெற்றதுGNUஅன்வர்

 

 


Posted

in

by

Tags:

Comments

14 responses to “உடல் ஒருபோதும் தவறு செய்வதில்லை..!”

  1. Shrini Avatar

    8 கட்டுரைகள் மிகவும் குறைவாக இருக்குமே.

    10 அல்லது 15 வந்தால் நன்று.

    A4 PDF ல் 50 பக்கத்திற்கு மேல் வருதல் நன்று.

    @gnuanwar இன்னும் சில கட்டுரைகள் கேட்டு வாங்குங்கள்.
    ஆசிரியர் அறிமுகம், மின்னஞ்சல் முகவரி தருக.

    1. gnuanwar Avatar

      நானும் ஆசிரியடம் இது பற்றி பேசினேன் அவர் கட்டுரகளை இன்னும் சேர்த்து அனுப்கிறேன் என்று சொன்னார் அதவரை நமக்கு கொடுத்த கட்டுரைகளை பதிபிக்க வேண்டாம் என்று சொன்னார் அவரின் புதிய கட்டுரைகள் வரும் வரை பதிபிக்க வேண்டாம்

      ஆசிரியரின் மின் அஞ்சல்

      நீங்கள் குறிப்பிட்டுள்ள வரலாறு மற்றும் தத்துவங்கள் குறித்த கட்டுரைகளை ஏற்கனவே அருண்குமார் எழுதி வருகிறார். என்னுடைய டைம்லைனிலும் அவர் என்னை டாக் செய்துள்ளார்.

      மேலும் இந்த கட்டுரைகள் முழுமையாக இல்லாமல் உள்ளதாக எனக்கு தோன்றுகிறது. இத்துடன் பல தொகுப்புகளை சேர்க்க விரும்புகிறேன். எனவே, சற்று அவகாசம் எடுத்து அனைத்து கட்டுரைகளையும் முழுமையாக தொகுத்து பின்பு முழுமை தன்மையுடன் வெளியிடலாம். அனைத்தும் முடித்து பின்பு உங்களுக்கு தகவல் கொடுக்கிறேன்.

      மேலும், நண்பரின் வீடியோ பார்த்தேன். நானே புத்தகத்தை தொகுக்கும் எடிட்டிங் வேலையை செய்ய முயற்சி செய்கிறேன், எனக்கு சந்தேகம் உள்ளபோது தங்களிடம் உதவி கேட்கிறேன். முதலில் கட்டுரைகளை எழுதி முடித்துவிட்டு தங்களை தொடர்புகொள்கிறேன். நன்றி.

      • அன்புடன். கார்த்தி.
  2. இரவி Avatar
    இரவி

    பொதுவாக, நாம் உள்ளடக்கத்தில் தலையிடுவது இல்லை என்றாலும்

    இந்தக் கட்டுரைகள் விபரீதமாக உள்ளன.

    வீட்டில் பிரசவம் பார்க்கத் தூண்டுதல், தடுப்பூசி வேண்டாம் என்பது கட்டுரை ஆசிரியரின் தனிப்பட்ட தெரிவாக இருக்கலாம்
    ஆனால், இவற்றை மின்னூல் பரப்புவது ஆபத்தானது

    இதை வெளியிட எனது மறுப்பைத் தெரிவிக்கிறேன்.

    1. gnuanwar Avatar

      இந்த கருத்துள்ள புத்தகங்கள் ஏற்கனவே அச்சு நூலாக வந்துள்ளது இதபற்றி ஆசிரியரிடம் பேசி ஒரு முடிவு எடுக்கலாம்

      1. இரவி Avatar
        இரவி

        இது குறித்து நூல் ஆசிரியர் முடிவெடுக்க ஒன்றும் இல்லை. நமது குழு தான் முடிவெடுக்க வேண்டும். அச்சில் உள்ள நூல்கள் அனைத்தையும் மின்னூல் ஆக்குவது நமது நோக்கம் இல்லை. ஒரு கதை, கவிதை அது நன்றாக இருக்கிறதா இல்லையா என்பது ஆளுக்கு ஆள் இரசனை மாறும். ஆனால், இக்கட்டுரைகள் உயிரோடு விளையாடுவன. இவற்றை வெளியிடுவதிலும் பரப்புவதிலும் நமக்கு தார்மிக பொறுப்பு உண்டு.

        இந்நூலைப் படித்து தடுப்பூசி போடாமல் எந்தக் குழந்தையாவது பாதிக்கப்பட்டால் அதற்கு நமது குழு பொறுப்பெடுக்க இயலுமா?

        இந்நூலைப் படித்து யாராவது வீட்டில் பிரசவம் பார்த்து தாயும் சேயும் இறந்தால் யார் பொறுப்பு?

        வெடிகுண்டு வைப்பது எப்படி, தற்கொலை செய்வது எப்படி, வல்லுறவு கொள்வது எப்படி… இந்தத் தலைப்புகளிலும் மின்னூல் வெளியிடுவோமா?

        மாற்று மருத்துவம் என்ற பெயரில் உயிரோடு விளையாடும் மோசடிக் கும்பலுக்குத் துணை போக வேண்டாம்.

        மீண்டும் என் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன்.

  3. gnuanwar Avatar

    உங்களது கருத்தை நான் மதிக்கிறேன் மேலும் ஆசிரியரின் பதிலையும் நாம் கேட்ப்போம் மேலும் என்ன மாதிரியான தரவுகளை கேட்கிறீர்கள் எனக்கு புரியவில்லை மேலும் இந்த மாற்று மருத்துவம் பற்றி தெறிந்து கொள்ள விருப்பட்டால் அதன் தரவுகளை தர காத்து இருக்கிறேன் http://acuhome.org/

    1. இரவி Avatar
      இரவி

      தெளிவுபடுத்தலுக்குக்காக:

      என்னுடைய வேண்டுகோள் தணிக்கை முனைவோ கருத்துச் சுதந்திரந்துக்கு எதிரானதோ அன்று.

      கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் உயிர்களோடு விளையாட முடியாது.

  4. இரவி Avatar
    இரவி

    எனக்கு தரவு வேண்டாம். FTE சார்பாக உறுதி மொழி வேண்டும். இதனைப் படித்து வாசகருக்குத் தீங்கு நேர்ந்தால் நமது குழு பொறுப்பெடுக்கத் தயாரா? என்ன வகையான பொறுப்பெடுப்பதாக அறிவிக்க முடியுமா? எனது மனைவி, குழந்தைக்குத் தவறான மருந்தோ மருத்துவமோ அளித்தால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு உண்டு.

    இந்த மாற்று மருத்துவ போதனைகளைக் கேட்டு யாராவது வீட்டில் பிரசவம் பார்த்துச் செத்தால் யார் பாதுகாப்பு தருவார்கள்?

    FTEஆல் இந்த பொறுப்பெடுக்க முடியாவிட்டால், இந்நூலைப் பதிப்பிப்பத்துப் பரப்புவது அறம் அன்று.

    இல்லை, பதிப்பிப்போம் என்று தொடர்வீர்களேயேனால், நான் இத்திட்டத்துக்குப் பங்களிப்பதை நிறுத்திக் கொள்ளத் தயங்க மாட்டேன்.

    உயிரோடு விளையாடும் திட்டங்களுக்கு என்னால் பங்களிக்க இயலாது. மன்னிக்கவும்.

  5. இரவி Avatar
    இரவி

    கட்டுரை எண் 1 – உண்மையில் நோய் என்றால் என்ன…?

    இக்கட்டுரையில் உள்ளவற்றுக்கு என் மறுப்பு:

    //இந்த நிலை மேலும் தொடரும்போது கழிவுகளை உடலை விட்டு நீக்க வேண்டிய உறுப்புகளின் [கல்லீரல், சிறுநீரகம்] இயக்கம் குறையும் இதனையும் மருந்துகளை கொடுத்து சரிசெய்ய முயற்சிக்கும் மருத்துவம் தோற்று, அந்த உறுப்பு கெட்டு போய்விட்டது என்று கூறி அந்த உறுப்பையே வெட்டி எறிந்துவிட்டு மாற்று உறுப்பு சிகிச்சை என்னும் பெயரில் மற்றவரின் உறுப்புகளை வெட்டி வைக்கும் முயற்சியில் ஈடு படுகிறது, ஆனால் இதனையும் தன்னுடையது அல்ல என்று அடையாளம் கண்டுகொண்ட உடல் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் போது அதனையும் நிராகரிக்கும். [மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தொடர்ந்து மருந்து எடுப்பது இந்த நோய் எதிர்ப்பு சக்தியை முடக்கி வைக்கவே என்பதை இங்கு கவனிக்க வேண்டும்//

    இது உடல் உறுப்பு மாற்றத்தை எதிர்க்கிறது. மருத்துவமனைக்கே போகாத ஒருவரின் சிறுநீரகம் பாதிப்படைந்து அவருக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்திப் பிழைக்க வைக்க முடியும் என்றால் பிழைக்க வைக்கலாமா கூடாதா?

    உங்கள் உறவுக்கு இப்படி ஒரு நிலை இருந்தால் நீங்கள் முறையான மருத்துவத்தை மறுத்து விட்டு இந்த “மாற்று மருத்துவர்களிடம்” போய் என்ன மருந்தெடுத்து காப்பாற்றுவீர்கள்?

    https://www.facebook.com/photo.php?fbid=138366736293734&set=a.109234725873602.10012.100003612254243&type=1 – இந்த இணைப்பு அரசு, அரசு மருத்துவர்கள் அனைவரையும் உறுப்புகளைத் திருடும் கொலைகாரர்கள் என்கிறது. இது தொடர்பாக ஏன் பொது நல வழக்கு தொடர்ந்து தன் வாதத்தை நிறுவக்கூடாது?

    //உண்மையில் புற்றுநோய் என்றால் என்ன என்பதனை உணரவேண்டும் – மேலே கூறியபடி உடலில் தொடர்ந்து கழிவுகள் தேக்கப்படும்போது உடல் அதனை வெளியேற்ற போதுமான சக்தி இல்லாவிட்டால், அந்த கழிவுகள் உள்ளுறுப்புகளை பாதித்துவிடும் என்று அறிந்த உடல் அதனை ஒரு கட்டியாக ஒன்று திரட்டி, அதன் மேலே ஒரு பாதுகாப்பு வளையத்தையும் உருவாக்கி ஒரு பகுதியில் ஒட்ட வைக்கிறது. இந்த நிலையில் அந்த உடலுக்கு முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தால் நிச்சயம் அந்த கட்டியை கரைத்து அந்த கழிவை வெளியேற்றும் தகுதியுடன் இருக்கிறது. ஆனால் இந்த நிலையில் ஆங்கில மருத்துவம் Biopsy test என்னும் பெயரில் அந்த கான்சர் கட்டியை வெட்டி துளை இடுவது அந்த கழிவுகள் உடல் முழுமைக்கும் பரவ ஏதுவாக இருக்கும். இங்கு உடல் தவறு செய்து கட்டியை உருவாக்கியதா..? அல்லது உடலை புரியாமல் மருத்துவம் தவறு செய்கிறதா என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்..!!!//

    இந்த மாபெரும் உளறலை எழுதிய மாற்று மருத்துவர் கார்த்திகேயனின் முறையான கல்வித் தகுதி என்ன என்று அறியலாமா? ஏனெனில் முதலாம் ஆண்டு உயிரியல் படிக்கும் மாணவனால் கூட புற்று நோய் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியும்.

    ஆங்கில மருந்து வாசனையே படாத எத்தனையோ கிராமத்தவர்களுக்கும் புற்று நோய் வருகிறது. மருத்துவமனைக்கே போகாமல் இறந்தும் போகிறார்கள். இங்கெல்லாம் உடல் என்ன செய்து கொண்டிருக்கிறது?

    புற்று நோய்க்கு மாற்று மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள், தீர்வுகளை விளக்க முடியுமா?

    1. gnuanwar Avatar

      ஒரு கருத்த்துக்கு எதிர் கருத்து கூருவது நன்று மேலும் அது பற்றிய ஜயங்களை அவரின் fb பக்கத்தில் கேட்டால் எல்லோருக்கும் தெளிவு கிடைக்கும் மேலும் இது பற்றி உங்களை தனி மடலில் தொடர்பு கொள்கிறேன்

      1. இரவி Avatar
        இரவி

        @gnuanwar வெறும் கருத்தென்றால் அதனால் ஒரு பாதகமும் இல்லை. அவர் உயிருக்கு உலை வைக்கும் பொறுப்பற்ற, உண்மையற்ற கூற்றுகளை மாற்று மருத்துவம் என்ற பெயரில் அறிவியலாக நிறுவ முனைகிறார். இதற்கு நான் முறைப்படி ஆதாரங்களைக் கேட்கிறேன். ஏற்கனவே அவரது காலக் கோட்டில் கேள்வி எழுப்பிய முறையான மருத்துவர்களைத் தடை செய்து விட்டார். எனவே, அங்கு உரையாடுவது வீண். வேண்டுமானால், அவர் இங்கு வந்து உரையாடட்டும். எப்படி இருந்தாலும், நான் FTE குழுவிடம் இருந்து தான் பதில் எதிர்பார்க்கிறேன்.

  6. இரவி Avatar
    இரவி

    மூளைச்சாவு, coma ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை கீழ்க்காணும் இரண்டு விக்கிப்பீடியா கட்டுரைகள் பள்ளிக்கூட மாணவர்கள் கூட புரிந்து கொள்ளும் அளவில் விளக்குகிறது.

    https://en.wikipedia.org/wiki/Brain_death

    https://en.wikipedia.org/wiki/Persistent_vegetative_state

    ஆனால், கட்டுரை ஆசிரியரோ தமிழக அரசையும் அரசு மருத்துவர்களையும் கொலைகாரர்கள் என்று ஏசுகிறது. இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

    1. gnuanwar Avatar

      அவரின் நூல் வந்த உடன் நாம் விவாதித்து முடிவு எடுப்போம் நன்றி

      1. இரவி Avatar
        இரவி

        இங்குள்ள 8 கட்டுரைகள் போக இன்னும் சில கட்டுரைகளை அனுப்புகிறேன் என்று தான் ஆசிரியர் சொல்லி உள்ளார். எனவே, இங்குள்ள 8 கட்டுரைகளில் இருந்து உரையாடலைத் தொடங்கலாம்.

Leave a Reply