நம் திட்டத்தை பற்றி சில பேச்சுகள்

நமது திட்டத்தை பேச சில எழுத்தாளர்கள்/பதிப்பாளரை சந்திக்கும் போது ஏன் இந்த திட்டத்தில் பங்களிப்பு செய்கிறாய் நான் சொல்வேன் இது community project என்று சொல்வேன் அதற்க்கு .com என்று இணையதளம் வைத்து கொண்டு என்ன   comunity project அதற்க்கு சினி வாசன் .com commercial அல்ல community என்று மாற்றினார் சினிவாசனுக்கு நன்றி.

நான் எதிர் கொள்ளும் கேள்விகள்

  • இந்த திட்டத்துக்கு எங்களது நூல்களை கொடுத்தால் என் அச்சு நூல்கள் விற்க்காது (இது நேற்று புத்தகம் வெளியிட்ட எழத்தாளரும் அடக்கம்)
  • நீ ஏன் இந்த திட்டத்தில் லாபம் இல்லாமல் உழைக்கிறாய்

இதற்க்கு என் மனதில் ஒடும் பதில்

  • ஆற்றில் விழுந்தவனை காப்பாற்ற வேடிக்கை பார்க்கும் நூறு பேரில் ஒருவன் மட்டுமே காப்பாற்றுவான் இந்த இதுவரை யாரிடமும் சொன்னதில்லை  சொன்னால் எழுதாளர்கள்/பதிப்பாளர்கள் மேற்கொண்டு பேச மாட்டார்கள்

தொடரும்


Posted

in

by

Tags:

Comments

One response to “நம் திட்டத்தை பற்றி சில பேச்சுகள்”

  1. இரவி Avatar
    இரவி

    // இது community project என்று சொல்வேன் அதற்க்கு .com என்று இணையதளம் வைத்து கொண்டு என்ன comunity project//

    .com என்றால் வணிகம் என்பது இணையத்தின் தொடக்க காலங்களில் நிலவிய வழமை. இப்போது அது பொதுப்பெயராக மாறி விட்டது.

    தளத்தில் விளம்பரங்கள் இல்லை. எந்த வகையிலும் விற்பனையோ வருவாயோ இல்லை. நன்கொடைகள் கோருவது இல்லை. முற்றிலும் தன்னார்வ உழைப்பில் திட்டத்தை எடுத்துச் செல்கிறோம். தளப் பெயர், வழங்கிகுக்கு ஆகும் செலவும் மிகக் குறைவே. அதை நம்மில் சிலரே ஏற்றுக் கொள்ள முடியும்.

    இணைய வாசகர்கள் பொதுவாக .com என்றே தளப் பெயர்களை இட்டுப் பழகி இருக்கிறார்கள். அதனாலும் இந்தப் பெயர் உதவும்.

    //இந்த திட்டத்துக்கு எங்களது நூல்களை கொடுத்தால் என் அச்சு நூல்கள் விற்க்காது (இது நேற்று புத்தகம் வெளியிட்ட எழத்தாளரும் அடக்கம்)//

    அவர்கள் பதிப்பித்து / எழுதி விற்கவே விற்காமல் கிடக்கும் நூல்களையாவது கேளுங்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் பதிப்பாளரும் தங்கள் வாசகர்களுக்கு மின்னூல் வாசிப்பை அறிமுகப்படுத்தினால், நாளை அவர்கள் தங்களின் நன்கு விற்பனையாகும் நூல்களுக்கு மின்னூல் பதிப்பு கொண்டு வரும் போது உதவும்.

    ஒரே ஒரு நூல் எழுதியவர்கள், பதிப்பித்தவர்கள் என்றால் நூல் வெளிவந்து எத்தனை ஆண்டுகள் ஆகிற்று என்று கேளுங்கள். பல ஆண்டுகளாக விற்காத நூல் என்றால் அது இனிமேலும் விற்றுத் தீரும் என்று எதிர்பார்க்க நியாயமில்லை. மின்னூலாக கொண்டு வந்தால் குறைந்தது அவர்களது சிந்தனைகளைப் பலரிடம் கொண்டு சேர்த்த நிறைவாவது கிடைக்கும். இல்லாவிட்டால், அச்சிட்டு விற்காமல் கிடக்கும் நூல்களோடு சேர்ந்து அவர்களும் சிந்தனைகளும் முடங்கித் தான் கிடக்கும்.

Leave a Reply