புது மின்னூல் – நல்ல பிள்ளை – சிறுகதைகள்

நூல் – https://drive.google.com/folderview?id=0B8GmAYG_dAynUUQ5UW95MkplS1U&usp=sharing&tid=0B8GmAYG_dAynVWxSbXE3V2V3eDg

நிர்மலா ராகவன் – [email protected]

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.

அட்டைப் படம் தருக.
மின்னூலாக்குக.


Posted

in

by

Tags:

Comments

5 responses to “புது மின்னூல் – நல்ல பிள்ளை – சிறுகதைகள்”

    1. Shrini Avatar

      வணக்கம், சீனி.

      கடந்த பிப்ரவரி 9-ம் தேதி நான் அனுப்பிய நல்ல பிள்ளை என்ற தொகுப்பின் தலைப்பை மாற்றியிருக்கிறேன். முதல் கதையில் ஒரு சிறு பிழை. அதையும் இணைத்திருக்கிறேன்.

      இதில் காந்தித்தாத்தா, அழகான, என் பெயர், இதுவும் ஒரு விடுதலைதான், ஏணி ஆகிய ஐந்தும் கம்பனில் தட்டச்சு செய்யப்பட்டவை.

      நன்றி.

      நிர்மலா ராகவன்

      அழகான மண்குதிரை (சிறுகதைத் தொகுப்பு)

      முன்னுரை

      வணக்கம். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கதைகளைப்பற்றிய குறிப்பு இதோ:

      எந்த வயதானாலும், பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை. அதிலும், படிப்பு இல்லாவிட்டால், அதோகதிதான். ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. (நல்ல பிள்ளை).

      குழந்தைகள் வாழ்வில் முன்னேறுவதோ, பின்தங்குவதோ வளர்ப்பினால் என்பதை வலியுறுத்துகிறது `ஒரு கிளை, இரு மலர்கள்’.

      தன் கலாசாரத்தில் பெருமிதம் கொள்ளாது, பிற இனத்தவரிடம் அதை ஏளனமும் செய்தால், தாம் உயர்ந்துவிட்டதாக எண்ணும் சில பரிதாபத்திற்குரியவர்களைக் கண்டு வருந்தியிருக்கிறேன். அப்படி ஒரு ஆசிரியை ‘காந்தித்தாத்தாவும் பொன்னுசாமி கங்காணியும்’ என்ற கதையில் வருகிறாள்.

      `தமிழர்கள் குடிக்கிறார்கள், அடிக்கிறார்கள்’ என்று பங்களாதேசிகளை மணந்துகொண்ட தமிழ்ப்பெண்கள் மலேசியாவில் அநேகர். வெளிநாட்டுக்காரர்கள் குறுகிய காலம் வேலை செய்ய இங்கு வந்துவிட்டு, பின்னர் தாய்நாட்டுக்கே திரும்பிப் போய்விடும் அபாயம் இருப்பதை இப்பெண்கள் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை (`அழகிய மண்குதிரை’).

      சிறுபான்மை இன மாணவிகள் இடைநிலைப் பள்ளியில் படும் பாடும், அவர்களை முன்னைற்றப் பாதையில் கொண்டு செல்லும் ஆசிரியையின் போராட்டமும். (ஏணி)

      நன்றி.

      நிர்மலா ராகவன், மலேசியா

      பொருளடக்கம்

      1 நல்ல பிள்ளை

      2 ஒரு கிளை, இரு மலர்கள்

      3 காந்தித்தாத்தாவும் பொன்னுசாமி கங்காணியும்

      4 பெயர் போன எழுத்தாளர்

      5 அழகான மண்குதிரை

      6 புது அம்மா வாங்கலாம்

      7 என் பெயர் காதல்

      8 பெரிய வாத்தியார்

      9 இதுவும் ஒரு விடுதலைதான்

      10 ஏணி

      நல்ல பிள்ளை

      “மாயா!”

      டி.வியில் தொடர் நாடகம் ஆரம்பிக்கும் நேரம். அவசரமாக, பழைய சோற்றை வாயில் அடைத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்த மாயா காதில் விழாததுபோல இருந்தாள்.

  1. sivamurugan Avatar
    sivamurugan

    @shrini FYI working on this

  2. sivamurugan Avatar
    sivamurugan

    @shrini book has been published

Leave a Reply