Updates from இரவி Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • இரவி 6:04 pm on September 18, 2015 Permalink | | Flag unresolved
    

   பங்களிப்பை நிறுத்திக் கொள்கிறேன் 

   உயிரோடு விளையாடும் மாற்று மருத்துவ மோசடி நூல்களை வெளியிட வேண்டாம் என்று ஏற்கனவே கருத்துரைத்தும் ( http://dev.freetamilebooks.com/ebooks/250 ), உடல் மொழி நூல் வெளியீட்டைக் காண அதிர்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து மாற்று மருத்துவ மோசடி நூல்கள் வரிசை கட்டி நிற்கின்றன என்பதால் இப்போக்கில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை இல்லை. இந்த நூல் எப்படி ஒரு பல்கலைக்கழக பாடநூலாக இருக்கிறது, ஏன் விகடன் போன்ற ஊடகங்கள் இத்தகைய ஆட்களுக்கு வெளிச்சம் தருகிறார்கள் என்பதற்குப் பின் பல்வேறு அரசியல்கள் இருக்கின்றன. ஆனால், உயிரோடு விளையாடும் திட்டத்துக்கு என்னுடைய பகுத்தறிவுக்கும் படிப்பறிவுக்கும் எதிராக உள்ள இத்தகைய மோசடிகளைப் பரப்பும் திட்டத்துக்கு என்னால் பங்களிக்க முடியாது.

   ஒரே ஒரு எடுத்துக்காட்டு: மூளைச் சாவுகும் கோமா நிலைக்கும் உள்ள மருத்துவ வேறுபாட்டைக் கூட அறியாமல் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து முறையாகச் சட்டத்துக்கு உட்பட்டு உறுப்புகளைப் பெறுவதை எல்லாம் தவறாகச் சித்தரித்து எழுதி இருக்கிறார்ஒ

   மாற்று மருத்துவமே தவறு என்று சொல்லவில்லை. ஆனால், நவீன மருத்துவத்துக்கு இணையாக முறையான ஆய்வு, தரவுகளுடன் எழுத வேண்டும். வாய்க்கு வந்ததை எல்லாம் எழுதி அதைப் பார்த்து மக்கள் வீட்டிலேயே பிரசவம் பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.

   https://en.wikipedia.org/wiki/Millennium_Development_Goals – இங்கு 4, 5 பாருங்கள். தாய் சேய் இறப்பைத் தடுப்பது, அவர்கள் நலம் என்பது 1900களில் பெருங்கனவு. நவீன மருத்துவம் வந்து தான் அதில் முன்னேற்றம்வந்திருக்கிறது. ஆங்கில மருத்துவம் பற்றி பயங்காட்டி வீட்டிலேயே மருத்துவம் பார்க்கத் தூண்டுகிறார்கள். இதில் எத்தனை பேர் செத்தார்கள் என்று தரவுஇல்லை. யார் பொறுப்பு?

   பெங்களூரில் உள்ள படித்த பொறியாளர் ஒருவர். மனைவியை மருத்துவமனைக்குக் கூட்டிப் போகாமல், scan பார்க்காமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்தேன் என்கிறார். ஒரு blade வைத்து இந்த மாதிரி psychoக்களைத் தான் இந்த மாற்று மருத்துவப் பரப்புரை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

   மருத்துவமனைக்குப் போனாலேயே காசு பிடுங்குவார்கள் என்று பயம் காட்டல். தொடர் ஊடகப் பயம் காட்டல். இவர்கள் எல்லாம் போய் சேருவது முறையாக மருத்துவம் பயிலாத போலிகளிடம் தான். இப்படி மாற்று மருத்துவத்தால் உயிருக்கு மோசமான நிலையில்
   எத்தனைப் பேர் மீண்டும் நவீன மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்று அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

   மாற்று மருத்துவர்கள் பாரதிராசா படத்தில் கிராமத்தைக் காட்டுவது போல் romaticஆக காட்டுகிறார்கள். ஆனால், நிலவரம் வேறு மாதிரி. இவர்களின் முதல் ஆயுதம் மருத்துவமனையில் காசு பிடுங்கிறார்கள் என்பதே. ஆனால், யாரும் இலவசமாக மருந்து கிடைக்கும் அரசு மருத்துவமனைக்குப் போங்கள் என்று சொல்வது இல்லை.

   நிறைய எழுதிக் கொண்டே போகலாம்.

   FreeTamilEbooks இல் எப்படிப்பட்ட நூல்களை வெளியிடலாம் என்பதற்கு ஒரு கொள்கை தேவை. குறிப்பாக, https://en.wikipedia.org/wiki/Wikipedia:General_disclaimer இங்கு கூறுவது போல்

   Not professional advice

   If you need specific advice (for example, medical, legal, financial or risk management), please seek a professional who is licensed or knowledgeable in that area.

   என்பது போல் முதற்பக்கத்தில் கொட்டை எழுத்தில்

   “இந்த நூலைப் படித்து மாற்று மருத்துவ முறையை முயன்று யாராவது செத்தால் அதற்கு FTE குழு பொறுப்பு இல்லை”

   என்று போடுங்கள். அந்தத் துணிவு இல்லாவிட்டால், நீங்கள் செய்து கொண்டிருப்பது ஒரு மாபெரும் மோசடிக்குத் துணை போவதே.

   இது கருத்து வேறுபாடு அன்று. குடி, புகையை விட பல மடங்கு உயிருக்கு மோசமாக அமையும் அறம் தவறிய செயற்பாடு.

   என்றாவது இப்படி ஒரு கொள்கை வந்தால் மீண்டும் பங்களிப்பதற்கு முனைகிறேன்.

   மன்னிக்கவும் நண்பர்களே.

   நன்றி.

   • இரவி
    
   • இரவி 6:22 pm on September 18, 2015 Permalink | Log in to Reply

    முதலில் இவர் மருத்துவர் தானா? நூலின் உள்ளே ஆங்கிலம் மருத்துவம் படித்ததாகப் போட்டிருக்கிறது. http://acuhome.org/?page_id=422 பக்கத்தில் அவர் படித்து வாங்கிய நவீன மருத்துவப் பட்டம் எதனையும் காணோம். எந்தக் கல்லூரியில் எந்த ஆண்டு MBBS முடித்தார்? அவர் படித்த இரத்தவியல் தொடர்பான பட்டப்படிப்பின் பெயர் என்ன? எந்தக் கல்லூரி? – இரவி

   • இரவி 6:24 pm on September 18, 2015 Permalink | Log in to Reply

    சும்மா இருப்பதே சுகம் அத்தியாயத்தில் இப்படி எழுதி இருக்கிறார்>

    “இந்த ஆழ்மயக்க நிலையை தற்காலத்தில் மூளைச்சாவு (Brain Death) என்றும் கூறுகிறார்கள் . கோமாவிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின்பு கண்விழித்தவர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் . ஆனால் , தற்கால மருத்துவர்கள் மூளைச்சாவு என்று கூறி – அவர் உயிருடன் உள்ள போதே அவருடைய உள்ளுறுப்புக்களை அறுத்தெடுத்து தானமாகக் கொண்டு செல்கிறார்கள் . இப்போது – தன் உறுப்புக்கள் வெட்டப்பட்டதன் விளைவாய் உடல் உயிரை விடுகிறது. ”

    difference between coma and brain death என்று தேடினால் கூகுளில் ஆய்வுகள் கொட்டுகின்றன. – இரவி

   • sivamurugan 8:04 pm on September 18, 2015 Permalink | Log in to Reply

    What is the take on this are we planning to revert the published book until final decision in place?

   • இரவி 6:57 am on September 25, 2015 Permalink | Log in to Reply

    சீனி,

    பொறுப்புத் துறப்பைச் சேர்த்துள்ளதை வரவேற்கிறேன்.

    இவ்வாறான பொறுப்புத் துறப்புகள் அட்டைப்படத்துக்கு அடுத்த பக்கத்திலேயே சேர்க்க வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பெயர் போடுவதற்கு முன்பேயே இதனைக் காட்டுவதே வழக்கம். அப்போது தான் உரிய கவனத்தைப் பெறும்.

    இது தொடர்பாக ஒரு நவீன மருத்துவர், சித்த மருத்துவரின் இருவரின் ஆலோசனைகளையும் பெற்றுள்ளோம். இருவருமே இவ்வாறான நூல்களின் உள்ள கூற்றுகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் பரப்ப வேண்டாம் என்றே கூறியுள்ளார்கள்.

    இந்நூல் வெளியிட்ட ஒரே வாரத்தில் இது வரை 3347 தரவிறக்கங்கள் கண்டுள்ளது. இதில் ஒரு குடும்பம் உண்மையற்ற வழிகாட்டல்களைப் பின்பற்றினாலும் ஒரு குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பதால் இந்நூலில் உள்ள கூற்றுகளை மெய்யறியும் வரை நூலை உடனடியாக நூலின் வெளியீட்டை நிறுத்தி வைக்க வேண்டுகிறேன்.

    ஏனெனில், நாம் கேள்விகள் கேட்கவும் ஆசிரியர் பதில் அளிக்கவும் இன்னும் பல வாரங்கள் ஆகும். அதுவரை தகறான தகவலைப் பரப்பிக் கொண்டே இருந்தால் இன்னும் பலருக்கே ஆபத்தாக முடியும்.

    அருள்கூர்ந்து இதனைத் தணிக்கையாகப் பார்க்க வேண்டாம். சாதி, சமயம் என்று பல துறைகளில் இணையத்தில் விசமக்கருத்துகள் பரப்பப்படுகின்றன. குறைந்தது, அவற்றை வயது வந்தவர் படித்துப் பகுத்தாய்ந்து தங்கள் நிலைப்பாட்டை எடுக்க முடியும். ஆனால், இதில் நிலைப்பாடு எடுக்க வாய்ப்பே இல்லாத குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள்.

   • இரவி 8:14 am on September 25, 2015 Permalink | Log in to Reply

    ஆசிரியரிடம் சான்று தேவைப்படும் கேள்விகளை வரிசையாகத் தருகிறேன்.

    கேள்வி 1: ஆசிரியர் அறிமுகம் பகுதியில் ஆங்கில மருத்துவத்தின் இரத்தவியல் துறையில் கல்வியையும் , பணியையும் துவங்கியதாகக் குறிப்பிடுகிறார். இப்படிப்பு குறித்த விவரங்கள் தேவை. எந்த ஆண்டு, எந்தக் கல்லூரி, என்ன படிப்பு, என்ன பட்டம்? எங்கு, எந்த ஆண்டு என்ன பொறுப்பில் பணியாற்றினார்?

   • இரவி 8:16 am on September 25, 2015 Permalink | Log in to Reply

    கேள்வி 2: நஞ்சில்லா உணவு அத்தியாயத்தில் வைட்டமின் மாத்திரைகள், கால்சியம் மாத்திரைகள் உட்கொள்வது வீண் என்கிறார். ஆனால், இவை பேறு காலத்தில் கர்ப்பிணிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகள். இவை வேண்டாம் என்று கூறுவதற்கான முறையான மருத்து ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோள் காட்ட வேண்டும்.

   • இரவி 8:19 am on September 25, 2015 Permalink | Log in to Reply

    கேள்வி 3: பால் – உணவா? அத்தியாயத்தில் மாட்டுப் பால் குடிக்காதீர்கள் என்கிறார். உடம்புக்குத் தேவையான சத்துகளை உடம்பு தானே உருவாக்கிக் கொள்ளும் என்கிறார் !

    https://en.wikipedia.org/wiki/Malnutrition_in_India

    பார்க்கவும். ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவின் மாபெரும் பிரச்சினை. பால், முட்டை போன்றவற்றை வாங்கித் திண்ண வசதியில்லாத இவர்களின் ஏன் இச்சத்துகளை உற்பத்தி செய்யவில்லை? இந்தியாவும் தமிழர்களும் ஊட்டச்சத்தில்லாமல் இருக்க வேண்டும், கர்ப்பிணிகள் பேறு காலத்தில் கூட ஊட்டச்சத்து மருந்துகளை உண்ணாமல் நோஞ்சான் குழந்தைகளைப் பெற வேண்டும் என்பது தான் ஆசிரியரின் நோக்கமா?

   • இரவி 8:27 am on September 25, 2015 Permalink | Log in to Reply

    கேள்வி 4: சான்றோர்களும் சான்றுகளும் அத்தியாயம்.

    // இன்றும் கூட , தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் மொத்தமாக இறந்த பின்புதான் அது செய்தியாக வெளிப்பட்டது . தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து அங்கொன்றும் – இங்கொன்றுமாக லட்சக்கணக்கான குழந்தைகள் பாதிப்படைந்துள்ளன . கிருமிக் கொள்கையிலேயே சந்தேகம் இருக்கும் போது , அவற்றைக் கொல்ல தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது சரியா ? //

    என்று கேட்கிறார்.

    தடுப்பூசி போட்டதால் பாதிக்கப்பட்டதாகச் சொல்கிற இலட்சக்கணக்கான குழந்தைகள் பற்றிய தரவு தேவை.

    தடுப்பூசியில் கோளாறு இருந்தால் அதற்கு தடுப்பூசி மருந்து நிறுவனமும் அரசும் பொறுப்பு. நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.

    தடுப்பூசி போடாமல் இறக்கும் குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்கிறார்கள்? ஆசிரியர் பொறுப்பேற்கிறாரா?

   • இரவி 8:33 am on September 25, 2015 Permalink | Log in to Reply

    கேள்வி 5: சான்றோர்களும் சான்றுகளும் அத்தியாயம்.

    AIDS நோயுக்கும் கிருமிக்கும் தொடர்பு இல்லை என்கிறார். இதற்கு 1980கள், 1990களில் வெளிவந்த காலாவதியான கட்டுரைகளை மேற்கோள் காட்டுகிறார்.

    பகுத்தறிவு உள்ளவர்கள்

    https://en.wikipedia.org/wiki/HIV/AIDS

    படிக்கலாம்.

    இந்தியாவில் இந்நோய் எவ்வளவு பெரிய பிரச்சினை என்று அறிய

    https://en.wikipedia.org/wiki/HIV/AIDS_in_India

    பார்க்கலாம்.

    தொடர்ந்து இந்நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க பல பத்தாண்டு பரப்புரைகள் தேவைப்பட்டுள்ளன. இப்படிப் பொய்யான கருத்துகளைப் பரப்புவதன் மூலம் ஆசிரியர் என்ன சொல்ல விரும்புகிறார்?

    AIDS நோய் எப்படிப் பரவுவதாக இவர் கருதுகிறார்? இந்நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும்? அந்தக் கழிவையும் உடல் தானே அகற்றிக் கொள்ளுமா? சும்மா இருந்தால் போதுமா?

    இந்தியா மக்கள் நலத்துறையில் எங்கெல்லாம் பாதிக்கப்பட்டு வருகிறதோ, எங்கெல்லாம் முன்னேற்றம் கண்டு வருகிறதோ அவற்றை எல்லாம் குறி வைத்து எதிர் பரப்புரை செய்வதன் நோக்கம் என்ன?

    இதனையே ஏன் மக்கள் நலத்துக்கு எதிரான தீவிரவாத முயற்சியாகக் கருதக்கூடாது?

   • இரவி 8:39 am on September 25, 2015 Permalink | Log in to Reply

    கேள்வி 6: கதை கதையாம் காரணமாம் அத்தியாயம்.

    அம்மைகளில் பல வகை உண்டு. ஒட்டு மொத்தமாக எந்த அம்மைக்கும் மருந்து வேண்டாம், கிருமிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்கிறார்.

    மனசாட்சி உள்ளவர்கள்

    https://en.wikipedia.org/wiki/Smallpox

    கட்டுரையில் உள்ள குழந்தைகளின் படங்களைப் பார்க்கலாம்.

    After vaccination campaigns throughout the 19th and 20th centuries, the WHO certified the eradication of smallpox in 1979.[5] Smallpox is one of two infectious diseases to have been eradicated, the other being rinderpest, which was declared eradicated in 2011.

    மக்கள் தடுப்பூசி போடாமல் விட்டு ஒழிக்கப்பட்ட நோய்கள் எல்லாம் மீண்டும் வர வேண்டும் என்பது தான் ஆசிரியரின் விருப்பமா?

    இவ்வாறு மீண்டும் வந்த ஒரு நோயை இங்கு காணலாம் –

    http://m.tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article7664867.ece

   • இரவி 8:44 am on September 25, 2015 Permalink | Log in to Reply

    கேள்வி 7 – தாகமும் – பசியும் தேவையைப் பொறுத்து! அத்தியாயம்

    நீரைக் காய்ச்சினால் நீர் செத்து விடுகிறது. காய்ச்சாமல் மண் பானையில் வைத்துக் குடியுங்கள் என்கிறார்.

    https://en.wikipedia.org/wiki/Waterborne_diseases

    வந்தால் ஆசிரியர் பொறுப்பேற்கிறாரா?

    The World Bank estimates 21% of communicable diseases in India are water related. Of these diseases, diarrhoea alone killed over 700,000 Indians in 1999 (estimated) – over 1,600 deaths each day. The highest mortality from diarrhoea is in children under the age of five, highlighting an urgent need for focused interventions to prevent diarrhoeal disease in this age group.

    http://www.who.int/mediacentre/multimedia/2002/ind_sanitation/en/

   • இரவி 8:49 am on September 25, 2015 Permalink | Log in to Reply

    கேள்வி 8 – சும்மா இருப்பதே சுகம் அத்தியாயம்

    // ஆனாலும் நாம் சும்மா இருப்பதில்லை . மயக்கமுற்ற நிலையில் – தண்ணீரும் , சோடாவும் தெளித்து உடலை எழுப்ப முயற்சிக்கிறோம் . பின்பு , ரத்த நாளம் வழியே குளுக்கோசையும் . ரசாயன மருந்துகளையும் ஏற்றுகிறோம் . சாதாரண மயக்க நிலை – கழிவின் தீவிரத்தைப் பொறுத்து நோயெதிர்ப்பை கைவிட்டு உணர்வுகளாக திரும்பும் . அல்லது சாதாரண மயக்கம் – ஆழ்நிலை மயக்கமாக ( கோமா ) மாறி – நோயெதிர்ப்பை சத்தமின்றி நிகழ்த்தும் .

    இப்போது தான் நம் டாக்டர் கூறுவார் – “ நோயாளி எப்போது கண்விழிப்பார் என்பதை உறுதியாக கூற முடியாது , அவர் எப்போது வேண்டுமானாலும் விழிக்கலாம் ! ” நாமும் இதை நம்பி மணிக்கணக்கில் – நாட்கணக்கில் – ஏன் மாதக் கணக்கில் கூட காத்திருக்கிறோம் . உடல் , தன் கழிவு வெளியேற்றத்தை மெல்ல மெல்ல முடித்துக் கொண்டு – பின்பு தான் நினைவு திரும்புகிறது .

    இந்த ஆழ்மயக்க நிலையை தற்காலத்தில் மூளைச்சாவு (Brain Death) என்றும் கூறுகிறார்கள் . கோமாவிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின்பு கண்விழித்தவர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் . ஆனால் , தற்கால மருத்துவர்கள் மூளைச்சாவு என்று கூறி – அவர் உயிருடன் உள்ள போதே அவருடைய உள்ளுறுப்புக்களை அறுத்தெடுத்து தானமாகக் கொண்டு செல்கிறார்கள் . இப்போது – தன் உறுப்புக்கள் வெட்டப்பட்டதன் விளைவாய் உடல் உயிரை விடுகிறது . //

    உடலில் glucose ஏற்றுவது தவறு..

    மருத்துவர்கள் உறுப்புகளை எடுத்து உயிரைக் கொல்கிறார்கள்….

    போதும்.. இதற்கு மேலும் இந்த அபத்தக் களஞ்சியத்தைப் படிக்கும் தெம்பு இல்லை.

    மேற்கண்ட கேள்விகளுக்கு ஆசிரியரின் பதில்களைப் பெறுங்கள்.

    அதுவரை புத்தகத்தை வெளியிட்டுப் பரப்புவதை நிறுத்தி வையுங்கள்.

    Acu Healer என்று சொல்லித் திரிகிற மொத்தக் கும்பலும் இதே கதைகளைத் தான் மாற்றி மாற்றி எழுதுகிறார்கள். இதில் ஒவ்வொரு நூலாகப் படித்து ஆராய ஒன்றும் இல்லை.

    கழிவே நோய் என்பதே இவர்கள் திரும்பத் திரும்ப அரைக்கும் மாவாக இருக்கிறது.

    • Shrini 12:24 am on September 26, 2015 Permalink | Log in to Reply

     நூலை Private ஆக மாற்றி விட்டேன்.

     பொது மக்கள் பார்க்க இயலாது.

     விரைவில் கேள்விகளைத் தொகுத்து ஆசிரியருக்கு அனுப்புகிறேன்.

     • இரவி 7:53 am on September 26, 2015 Permalink | Log in to Reply

      நடவடிக்கைக்கு நன்றி, சீனி.

   • Shrini 2:17 am on October 24, 2015 Permalink | Log in to Reply

    உடலின் மொழி – சில கேள்விகள்

    சமீபத்தில் உடலின் மொழி நூலை வெளியிட்டபோது, அதன் கருத்துகள் மீதான உண்மைத்தன்மைகள் பற்றிய விவாதம் எழுந்தது.

    நூலை வாசித்துவிட்டு, எனது சந்தேகங்களை தொகுத்துள்ளேன்.

    மக்கள் நலனை முன்னிட்டு நூலை தற்காலிகமாக நீக்கியுள்ளோம்.

    ஆசிரியரிடமிருந்து தக்க பதில்கள் வந்தவுடன் மீண்டும் வெளியிடுதல் பற்றி தீர்மானிப்போம்.

    கேள்விகளை இணைத்துள்ளேன்.

    அன்வர்,

    இவற்றை நூலாசிரியருக்கு அனுப்ப வேண்டுகிறேன்.

    நன்றி

    https://drive.google.com/file/d/0B8GmAYG_dAynT0JmQXY2QWxlZG85Y0FtXzAyZHk4V3JsZzJ3/view

  • இரவி 8:02 pm on May 26, 2015 Permalink | | Flag unresolved

    Tags: அட்டைப்படம்   

    தமிழ் இன்று – அட்டைப்படம் தேவை 

    தமிழ் இன்று இத்திட்டத்தின் கீழ் வெளியான முதல் மின்னூல்.

    http://freetamilebooks.com/ebooks/tamil-indru/

    முதல் மின்னூல் என்பதால் எப்படி அட்டைபடம் செய்வது என்று புரியாமலேயே வெளியிட்டு விட்டோம் 🙂 இப்போது மற்ற புதிய நூல்களைப் பார்த்தால், நமக்கும் ஒரு அழகிய அட்டைப் படம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது 🙂 எனவே, ஒரு அட்டைப்படம் வடிவமைத்துத் தர வேண்டுகிறேன். நூல் முற்றிலும் திறந்த காப்புரிமம் உடையது. வணிக விற்பனை உரிமை, திருத்துதல் உரிமை உட்பட. நம் திட்டம் அறிமுகப்படுத்தி இருக்கும் அச்சு நூல் திட்டத்திலும் இந்நூலைக் கொண்டு வர விரும்புகிறேன்.

     
   • இரவி 11:56 am on February 19, 2015 Permalink | | Resolved
    • Shrini marked this resolved
     8:01 am on July 23, 2015
    • Shrini marked this unresolved
     8:01 am on July 23, 2015
     

    புது மின்னூல் – ஐஸ் க்ரீம் பூதம் 

    @shrini – தல, மின்னஞ்சலில் இது தொடர்பாக உள்ள கோப்புகளைக் கவனிக்கவும்.

     
   • இரவி 8:43 am on July 29, 2014 Permalink | | Flag unresolved
    • Shrini marked this normal
     10:11 am on April 17, 2015
    • Shrini marked this resolved
     10:11 am on April 17, 2015
    • Someone marked this unresolved
     6:11 am on December 26, 2014
    • Someone marked this normal
     4:08 am on December 26, 2014
    • Someone marked this resolved
     2:55 am on December 26, 2014
    • Someone marked this normal
     6:51 pm on December 25, 2014
    • Someone marked this resolved
     2:35 pm on December 25, 2014
    • Someone marked this unresolved
     12:04 am on December 25, 2014
    • Someone marked this normal
     6:40 pm on November 9, 2014
    • Someone marked this resolved
     3:29 pm on October 21, 2014
    • Someone marked this unresolved
     4:41 am on October 18, 2014
    • Someone marked this normal
     2:32 am on October 8, 2014
    • Someone marked this resolved
     2:28 am on October 8, 2014
    • Someone marked this unresolved
     11:05 pm on September 7, 2014
    • Someone marked this normal
     10:55 pm on September 7, 2014
    • Someone marked this resolved
     5:03 pm on September 6, 2014
    • Someone marked this unresolved
     5:02 pm on September 6, 2014
    • Someone marked this normal
     11:25 am on August 30, 2014
    • Someone marked this resolved
     11:14 am on August 30, 2014
    • Someone marked this unresolved
     5:31 pm on July 29, 2014

    Tags: உரையாடல்   

    நூல்களில் எழுத்துப் பிழைகள் 

    நூல்களில் உள்ள எழுத்துப் பிழைகளைக் களைய நடவடிக்கை எடுக்குமாறு சொக்கன் வேண்டியுள்ளார். பார்க்க – http://freetamilebooks.com/first-birthday-100-books/#comment-358 . நானும் பல நூல்களில் இந்தச் சிக்கலை உணர்ந்துள்ளேன். என்ன செய்யலாம்?

    1. தன்னார்வலர்களைக் கொண்டு நூல்களைத் திருத்துவது என்பது மிகுந்த வேலைப்பளு தருவது என்பதால் இயலாத காரியம்.

    2. சில எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தைப் பிறர் திருத்துவதை விரும்புவதில்லை. தொகுப்பாசிரியரின் பணி, எழுத்துப் பிழை திருத்தும் பணி சிக்கலானவை. மிகை திருத்தமாகவும் முடிந்து விடக்கூடும்.

    எனவே,

    எழுத்தாளர்கள் முதல் முறை தங்கள் நூல்களை அனுப்பி வைக்கும் போதே, மேலோட்டமாக ஒரு பார்வை இட்டு, எழுத்துப் பிழைகள் தென்பட்டால் நூலைத் திருப்பி அனுப்பி பிழைகள் திருத்தி அனுப்பக் கோரலாம். பிழைகள் திருத்துவதுடன், சுருக்கி எழுதுதல், மேம்பட எழுதுதல் ஆகியவற்றையும் கவனிக்குமாறு கோரலாம். இது அவர்களுக்கும் நல்லதே. என்னுடைய முதல் மின்னூலை வலைப்பதிவுகளில் இருந்து தொகுத்து இடும் போது, சீராக்கி எழுதவே ஒரு நாள் ஆனது. தத்தம் எழுத்தை மீண்டும் படித்து சீராக்க நல்ல வாய்ப்பு. ஏனெனில், சில ஆக்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதியவையாக இருக்கும்.

    (அல்லது)

    தொழில்முறையாக இந்தச் சேவையை அளிப்பவர்களின் தொடர்பு விவரங்களைச் சேகரித்து எழுத்தாளர்களுக்குத் தரலாம். இலவச நூலுக்குக் காசு செலவழித்து யாரும் பிழை திருத்துவார்களா தெரியாது. ஆனால், தொழில்முறையாக செய்ய ஒரு வாய்ப்பு.

    உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

    நன்றி

     
    • Jegadeeswaran Natarajan 11:42 am on July 30, 2014 Permalink | Log in to Reply

     ஒவ்வொரு நாளின் முடிவிலும் அன்று நடந்ததை அசைப்போட்டு, திருத்தங்கள் செய்வதைப் போல இப்போது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கையில் சிந்தித்து இருக்கின்றீர்கள்.

     தனிப்பட்ட முறையில் அச்சகங்களால் அச்சடிக்கப்படும் நூல்களில் கூட எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. அவர்கள் உரைதிருத்த தனி நபர்களை வைத்தும், சில பிழைகள் தவறுகின்ற வாய்ப்பு உள்ளது. அவ்வாறிருக்க தனிப்பட்ட ஒருவர் மட்டுமே எழுதும் நூலில் எழுத்துப்பிழைகள் சாத்தியமே. எழுதியவர் தவிற பிறர் படிக்கும் பொழுதே அத்தவறுகள் தென்படும். எனவே தன்னாவளர்களையும் தேடிப் பயணிப்போம். மேலும்.

     1) தொடக்க காலத்தில் வெளியிட்ட நூல்களின் குறிப்பு பக்கங்களில் அட்டைப்படம் இடம்பெறவில்லை. அதனை இணைக்க வேண்டும். உதாரணம்,. தங்களுடைய முதல் மின்னூல்,. தலைப்பும் தங்கள் பெயரும் இதில் இடம் பெறாத அட்டைப்படம் இருந்தாலும் குறிப்பில் இடம்பெறவில்லை. இவ்வாறு இருக்கும் பக்கங்களை புதுப்பிக்கலாம்.
     http://freetamilebooks.com/ebooks/tamil-indru/

     2) வெளியிடுவது தமிழ் நூல் என்றாலும், தலைப்பில் தமிழ் இல்லாமல் Free Tamil Ebooks என்றே பல இடங்கள் இத்திட்டம் பற்றி குறிப்பிட வேண்டியிருக்கிறது. இதனை மாற்றுவது குறித்து ஏதேனும் ஆலோசனைகள் இருக்கின்றனவா?

     3) எழுத்தாளர்கள் வாரீயாக நூல்களை தேடும் வசதி, இதுவரை நம் திட்டத்தில் எழுதியுள்ள எழுத்தாளர்களின் பெயர்கள் கொண்ட ஒரு பக்கம் என இணைக்கலாம்.

     4) தற்போதுள்ள நூல் வகைகளில் நுட்பம் மற்றும் ஆளுமைகளில் மிகக் குறைவான அளவே நூல்கள் உள்ளன. இது போன்ற நூல் வகைகளை அதிகம் செய்ய ஏதேனும் போட்டியொன்றை நடத்தலாமா?

     நன்றி!..

   • இரவி 5:47 pm on June 4, 2014 Permalink | | Resolved
    • Someone marked this resolved
     11:44 pm on December 24, 2014
    • Someone marked this unresolved
     6:56 pm on November 26, 2014
    • Someone marked this normal
     6:51 pm on November 26, 2014
    • Someone marked this resolved
     6:24 am on November 11, 2014
    • Someone marked this unresolved
     5:05 pm on September 6, 2014
    • Someone marked this normal
     5:04 pm on September 6, 2014
    • Someone marked this resolved
     5:03 pm on September 6, 2014
    • Someone marked this unresolved
     3:41 pm on June 11, 2014
    • Someone marked this normal
     1:15 am on June 11, 2014
    • Someone marked this resolved
     1:41 am on June 10, 2014
    • Someone marked this unresolved
     7:46 am on June 9, 2014

    Tags: நுட்பம்   

    நண்பர்களுக்கு வணக்கம். இந்த dev தளத்திலும் நூல்களை வெளியிடும் முதன்மைத் தளத்திலும் என்னென்ன நுட்ப வசதிகள் வேண்டும் என்பதை இந்த இழையில் தெரிவியுங்கள். பொருத்தமான ஆலோசனைகளை இயன்ற வரை நிறைவேற்றுவோம். என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வர @ravidreams என்று இடுங்கள். நன்றி.

     
    • Jegadeeswaran Natarajan 10:01 am on June 5, 2014 Permalink | Log in to Reply

     இந்த இணைப்பு பாலம் நன்றாக உள்ளது. உடன் பலரின் கவனத்தினைப் பெறவும், பணிகள் துரிதமாக நடைபெறவும் உதவுகிறது.

     1) இந்த தளத்திலிருந்து freetamilebooks.comக்கு செல்ல இணைப்பொன்றினை வலது பட்டையில் இடுங்கள்.

     2) இவ்வாறு ஒன்றினைந்து புத்தகங்களை உருவாக்குகிறோம் என்பதை freetamilebooks.com தளத்தில் சிறு குறிப்பொன்றினை இணையுங்கள் (தேவையிருப்பின்)

     இப்போதைக்கு இவ்வளவுதான் தோன்றியது. வேறு ஏதேனும் தோன்றினால் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி @ravidreams

     • இரவி 4:19 am on June 7, 2014 Permalink | Log in to Reply

      1. ஆச்சு.

      2. freetamilebooks.com தளத்தில் உள்ள எங்களைப் பற்றி பகுதியில் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். செய்வோம்.

    • Vasanthakumar 7:59 am on June 9, 2014 Permalink | Log in to Reply

     நண்பர் ரவி @ravidreams அவர்களுக்கு வணக்கம் ..

     புத்தகங்களை நம்முடைய தளத்திலே படிக்கும்படியான ஆன்லைன் Flip book நம்மால் டெக்னிக்கலாக ஏற்படுத்தமுடியுமா? உதாரணத்திற்க்கு கீழே இருக்கும் இணைப்பை அழுத்திப்படிக்கவும். CC @shrini

     https://archive.org/details/orr-6208_Tamil-Novelgal-Katturaithoguppu

     http://abpublishinghouse.com/store/docs/vinnai.html

     • Shrini 3:02 pm on June 9, 2014 Permalink | Log in to Reply

      http://issuu.com ல் PDF கோப்புகளை ஏற்றி, பின் அந்த இணைப்பை எங்கும் பயன்படுத்தலாம்.

      ஆனால் இதை செய்ய வேண்டுமா என யோசிக்க வேண்டும்.

      @ravidreams கருத்து என்ன ?

      • Jegadeeswaran Natarajan 5:39 am on June 12, 2014 Permalink | Log in to Reply

       நண்பர் வசந்தகுமார் அவர்கள் கூறும் அலோசனையை ஒத்து நானும் முன்பொருமுறை கூகுள் குரூப்பில் கூறியிருந்தேன். அதற்கு ரவி அவர்கள்.

       “மேலோட்டமாக பார்வையிட நீங்கள் சொல்லும் வசதி உதவும். படிக்கலாமா முடிவெடுத்து தரவிறக்கவும் உதவும். தற்போது உள்ள pdfஐக் கூட தரவிறக்கிப் பார்வையிடலாம். அல்லது, உலாவியில் epub நீட்சியை நிறுவினாலும் இலகுவில் நோட்டமிடலாம்.

       //தரவிரக்கிதான் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாதவர்களும், அதிக இணையதள வேகம் உள்ளவர்களும் நேரடியாக படிக்க ஆர்வமாக இருக்கிறார்கள்.//

       இல்லை, epub வடிவில் உள்ள மின்னூலைத் தரவிறக்கி மின்னூல் கருவியில் இட்டுப் படித்தால் தான் மின்னூல் வாசிப்பின் முழு சுகம் தெரியும் 🙂 இதன் பொருட்டு ஒரு கட்டத்தில் pdf நிறுத்திவிடலாமா என்று கூட எண்ணியதுண்டு :)”

       என்று தெரிவித்திருந்தார். நன்றி.

    • Jegadeeswaran Natarajan 11:17 am on June 13, 2014 Permalink | Log in to Reply

     நண்பரே, இத்தளத்தில் Freetamilebooks இணைப்புக்கு கீழே கூகுள் டிரைவ் இணைப்பினையும் இணைக்க வேண்டுகிறேன். ஒவ்வொரு முறையும் சீனிவாசன் அவர்கள் தந்துள்ள இணைப்பினைத் தேடிச் செல்ல வேண்டியுள்ளது. நன்றி. @ravidreams

   c
   Compose new post
   j
   Next post/Next comment
   k
   Previous post/Previous comment
   r
   Reply
   e
   Edit
   o
   Show/Hide comments
   t
   Go to top
   l
   Go to login
   h
   Show/Hide help
   shift + esc
   Cancel