மின்மடல் சோதனை @shrini @ravidreams
Updates from ftedev Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ftedev
-
ftedev
மதுரை புத்தகக் காட்சியில் கட்டற்ற தமிழ் மின்னூல்கள் அறிமுகம்
இன்று துவங்கி 10 நாட்கள் நடக்கும் மதுரை புத்தகக் காட்சியில் கட்டற்ற தமிழ் மின்னூல்களை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உண்டு. ஆர்வமுள்ள நமது குழு நண்பர்கள் தெரிவிக்கவும். அங்கு தமிழ் விக்கிப்பீடியா, கட்டற்ற மென்பொருளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள கடையுடன் இணைந்து இப்பரப்புரையை நடத்தலாம். காட்சிக்கு வருபவர்களுக்கு மின்னூல் வாசிப்பு, நமது செயலிகள் பற்றி தெரிவிக்கலாம். புதிதாக பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட ஒப்புதல் வாங்கலாம் – இரவி
-
ftedev
சென்னையில் எழுத்தாளர்களுக்கான கட்டற்ற தமிழ் மின்னூல்கள் அறிமுகம்
நாளை ஆகத்து 29, 30 ஆகிய தேதிகளில் விக்கிப்பீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து எழுத்தாளர்களுக்கு என்று சிறப்பாக நடத்தும் தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கம் தொடர்பான கலந்துரையாடல், பயிற்சி. இதில் கட்டற்ற தமிழ் மின்னூல்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்புண்டு. எனவே, சென்னையில் உள்ள நமது திட்டத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டு பங்களிக்கலாம். தங்கள் சிறப்பு வருகையை எதிர்நோக்குகிறோம். இயலுமெனில் மடிக்கணினியுடன் வருக. நேரம்: காலை 10 மணி முதல் (அமைவிடம்: தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்), சென்னை–600025. தொடர்பிற்கு: அ. இரவிசங்கர் 9986 99 3336 – இரவி
ftedev 3:26 pm on December 31, 2015 Permalink | Log in to Reply
வெற்றி. மடல் வருகிறது. @shrini