உயிரோடு விளையாடும் மாற்று மருத்துவ மோசடி நூல்களை வெளியிட வேண்டாம் என்று ஏற்கனவே கருத்துரைத்தும் ( https://dev.freetamilebooks.com/ebooks/250 ), உடல் மொழி நூல் வெளியீட்டைக் காண அதிர்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து மாற்று மருத்துவ மோசடி நூல்கள் வரிசை கட்டி நிற்கின்றன என்பதால் இப்போக்கில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை இல்லை. இந்த நூல் எப்படி ஒரு பல்கலைக்கழக பாடநூலாக இருக்கிறது, ஏன் விகடன் போன்ற ஊடகங்கள் இத்தகைய ஆட்களுக்கு வெளிச்சம் தருகிறார்கள் என்பதற்குப் பின் பல்வேறு அரசியல்கள் இருக்கின்றன. ஆனால், உயிரோடு விளையாடும் திட்டத்துக்கு என்னுடைய பகுத்தறிவுக்கும் படிப்பறிவுக்கும் எதிராக உள்ள இத்தகைய மோசடிகளைப் பரப்பும் திட்டத்துக்கு என்னால் பங்களிக்க முடியாது.
ஒரே ஒரு எடுத்துக்காட்டு: மூளைச் சாவுகும் கோமா நிலைக்கும் உள்ள மருத்துவ வேறுபாட்டைக் கூட அறியாமல் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து முறையாகச் சட்டத்துக்கு உட்பட்டு உறுப்புகளைப் பெறுவதை எல்லாம் தவறாகச் சித்தரித்து எழுதி இருக்கிறார்ஒ
மாற்று மருத்துவமே தவறு என்று சொல்லவில்லை. ஆனால், நவீன மருத்துவத்துக்கு இணையாக முறையான ஆய்வு, தரவுகளுடன் எழுத வேண்டும். வாய்க்கு வந்ததை எல்லாம் எழுதி அதைப் பார்த்து மக்கள் வீட்டிலேயே பிரசவம் பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.
https://en.wikipedia.org/wiki/Millennium_Development_Goals – இங்கு 4, 5 பாருங்கள். தாய் சேய் இறப்பைத் தடுப்பது, அவர்கள் நலம் என்பது 1900களில் பெருங்கனவு. நவீன மருத்துவம் வந்து தான் அதில் முன்னேற்றம்வந்திருக்கிறது. ஆங்கில மருத்துவம் பற்றி பயங்காட்டி வீட்டிலேயே மருத்துவம் பார்க்கத் தூண்டுகிறார்கள். இதில் எத்தனை பேர் செத்தார்கள் என்று தரவுஇல்லை. யார் பொறுப்பு?
பெங்களூரில் உள்ள படித்த பொறியாளர் ஒருவர். மனைவியை மருத்துவமனைக்குக் கூட்டிப் போகாமல், scan பார்க்காமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்தேன் என்கிறார். ஒரு blade வைத்து இந்த மாதிரி psychoக்களைத் தான் இந்த மாற்று மருத்துவப் பரப்புரை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
மருத்துவமனைக்குப் போனாலேயே காசு பிடுங்குவார்கள் என்று பயம் காட்டல். தொடர் ஊடகப் பயம் காட்டல். இவர்கள் எல்லாம் போய் சேருவது முறையாக மருத்துவம் பயிலாத போலிகளிடம் தான். இப்படி மாற்று மருத்துவத்தால் உயிருக்கு மோசமான நிலையில்
எத்தனைப் பேர் மீண்டும் நவீன மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்று அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
மாற்று மருத்துவர்கள் பாரதிராசா படத்தில் கிராமத்தைக் காட்டுவது போல் romaticஆக காட்டுகிறார்கள். ஆனால், நிலவரம் வேறு மாதிரி. இவர்களின் முதல் ஆயுதம் மருத்துவமனையில் காசு பிடுங்கிறார்கள் என்பதே. ஆனால், யாரும் இலவசமாக மருந்து கிடைக்கும் அரசு மருத்துவமனைக்குப் போங்கள் என்று சொல்வது இல்லை.
நிறைய எழுதிக் கொண்டே போகலாம்.
FreeTamilEbooks இல் எப்படிப்பட்ட நூல்களை வெளியிடலாம் என்பதற்கு ஒரு கொள்கை தேவை. குறிப்பாக, https://en.wikipedia.org/wiki/Wikipedia:General_disclaimer இங்கு கூறுவது போல்
Not professional advice
If you need specific advice (for example, medical, legal, financial or risk management), please seek a professional who is licensed or knowledgeable in that area.
என்பது போல் முதற்பக்கத்தில் கொட்டை எழுத்தில்
“இந்த நூலைப் படித்து மாற்று மருத்துவ முறையை முயன்று யாராவது செத்தால் அதற்கு FTE குழு பொறுப்பு இல்லை”
என்று போடுங்கள். அந்தத் துணிவு இல்லாவிட்டால், நீங்கள் செய்து கொண்டிருப்பது ஒரு மாபெரும் மோசடிக்குத் துணை போவதே.
இது கருத்து வேறுபாடு அன்று. குடி, புகையை விட பல மடங்கு உயிருக்கு மோசமாக அமையும் அறம் தவறிய செயற்பாடு.
என்றாவது இப்படி ஒரு கொள்கை வந்தால் மீண்டும் பங்களிப்பதற்கு முனைகிறேன்.
மன்னிக்கவும் நண்பர்களே.
நன்றி.
- இரவி
Leave a Reply
You must be logged in to post a comment.